வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திரும்பி பார்க்க வைக்கும் நாசா.. நிலவுக்கு ரொம்வே கிட்ட செல்லும் ஓரியன் காப்ஸ்யூல்! மாபெரும் சாதனை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்கா அனுப்பியுள்ள ஆர்டெமிஸ் ராக்கெட்டின் ஓரியன் விண்கலம், 5 நாட்களில் நிலவுக்கு மிக அருகே சென்றுள்ளது.

அமெரிக்கா இப்போது மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக அமெரிக்காவின் நாசா தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

1969இல் எப்படி அப்பல்லோ ராக்கெட் மூலம் எப்படி நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டார்களோ, அதேபோல இப்போது ஆர்டெமிஸ் திட்டம் மூலம் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

தவப் புதல்வனின் ’கலகத் தலைவன்’ குறித்து தான் முதல்வருக்கு கவலை! அதிமுக ஆர்பி உதயகுமார் விமர்சனம்! தவப் புதல்வனின் ’கலகத் தலைவன்’ குறித்து தான் முதல்வருக்கு கவலை! அதிமுக ஆர்பி உதயகுமார் விமர்சனம்!

நாசா

நாசா

இந்த திட்டம் குறித்து நாசா விரிவான சோதனைகளை நடத்தி வருகிறது. முதலில் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் ஆர்ட்டெமிஸ்-1 என்ற ராக்கெட் கடந்த புதன்கிழமை ஏவப்பட்டது. ஆளில்லாத இந்த ராக்கெட்டை அனுப்பி அமெரிக்கா முடிவு செய்துள்ளது. எரிபொருள் கசிவு உள்ளிட்ட பல காரணங்களால் ராக்கெட் ஏவுவது தள்ளி வைக்கப்பட்ட நிலையில், கடந்த புதன்கிழமை ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் தான் மனித டம்மிகளுடன் ஓரியன் காப்ஸ்யூல் நிலவுக்குச் செல்கிறது.

நிலவுக்கு

நிலவுக்கு

கடந்த புதன்கிழமை ராக்கெட் ஏவப்பட்ட நிலையில், இப்போது இந்த ஓரியன் காப்ஸ்யூல் நிலவை அடைந்து உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் நாசாவின் காப்ஸ்யூல் நிலவை அடைந்துள்ளது இதுவே முதல்முறையாகும். அமெரிக்க வரலாற்றில் ரொம்பவே காஸ்ட்லியான விண்வெளி பிரோகிராமாக இது பார்க்கப்படுகிறது. சுமார் 4.1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 33 ஆயிரம் கோடி) செலவில் இந்த சோதனை செய்யப்படுகிறது.

ரொம்பவே அருகில்

ரொம்பவே அருகில்

இந்த காப்ஸ்யூல் இப்போது 370,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நிலையில், அங்கிருந்து நிலாவும் பூமியும் எப்படி இருக்கும் என்பது தொடர்பான படங்களையும் நாசா வெளியிட்டு உள்ளது. ஓரியன் காப்ஸ்யூல் திட்டமிடப்படி துல்லியமாகச் சென்று கொண்டு இருப்பதாகவும் இது ரொம்பவே மகிழ்ச்சியைத் தருவதாகவும் நாசா தெரிவித்து உள்ளது. அதிகபட்சமாக நிலவுக்கு 130 கிலோமீட்டர் தூரம் வரை நாசாவின் இந்த ஓரியன் காப்ஸ்யூல் சென்றது. எப்போதும் நிலவுக்குப் பின்பகுதியில் சாட்டிலைட் செல்லும்போது, பூமியில் இருந்து அதை நம்மால் தொடர்பு கொள்ள முடியாது.

மறுபக்கம்

மறுபக்கம்

இந்த பிளாக்அவட் காலம் சுமார் 30 நிமிடங்கள் வரை இருக்கும். ஓரியன் காப்ஸ்யூல் நிலவுக்கு அருகே சென்ற போது அது நிலவுக்குப் பின்னால் போய்விட்டது. இதனால் அதிமுக்கியமான ராக்கெட் ஒன்று சரியான நேரத்தில் செயல்படத் தொடங்கியதா என்பது குறித்து நாசா ஆய்வாளர்களிடம் உரியத் தகவல் முதலில் இல்லை. நிலவைச் சுற்றி மறுபக்கம் இந்த காப்ஸ்யூல் வந்த பின்னர் தான் ஆய்வாளர்கள் நிம்மதி அடைந்தனர். ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் தரையிறங்கி பகுதிக்கு மேலேயும் இந்த காப்ஸ்யூல் பயணித்து உள்ளது.

 ஓரியன் காப்ஸ்யூல்

ஓரியன் காப்ஸ்யூல்

இந்த ஓரியன் காப்ஸ்யூல் சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழையக் குறிப்பிட்ட வேகத்தில் செல்ல வேண்டும். அதற்குத் தான் இந்த என்ஜின் செயல்பாடுகள் முக்கியம். மற்றொரு என்ஜின் வரும் வெள்ளிக்கிழமை செயல்படும். இந்த என்ஜின் தான் ரொம்ப முக்கியமானது. ஏனென்றால் இதுதான் ஓரியன் காப்ஸ்யூல் சந்திரனின் சுற்றுப்பாதையில் தள்ளும். அதேபோல பூமியில் இருந்து அதிக தூரம் செல்லும் காப்ஸ்யூல் என்ற சிறப்பையும் இது பெறும். அடுத்த திங்கட்கிழமை இது பூமியிலிருந்து அதிகபட்சமாக 433,000 கிலோமீட்டர் தூரத்தில் செல்லும்

தரையிறங்காது

தரையிறங்காது

அதன் பின்னர் சுமார் ஒரு வாரம் அது நிலவுக்கு மிக அருகே சுற்றிக் கொண்டு இருக்கும். அதன் பின்னர் டிசம்பர் 11ஆம் தேதி இந்த காப்ஸ்யூல் பசிபிக் கடலில் விழும். இந்த ஓரியன் காப்ஸ்யூல் சந்திரனில் தரையிறங்காது. அது நிலவைச் சுற்றி மட்டுமே வரும். அடுத்து ஆர்டெமிஸ்-2 ராக்கெட் மூலம் அடுத்தாண்டு மனிதர்கள் விண்வெளிக்குச் செல்வார்கள். இருப்பினும், அதிலும் அவர்கள் விண்வெளியில் தரையிறங்க மாட்டார்கள்

நாசா

நாசா

இந்த ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்கள், சந்திரனைச் சுற்றி ஓரியனில் காப்ஸ்யூலில் சுற்றி மீண்டும் பூமிக்குத் திரும்புவார்கள். இந்த இரண்டும் வெற்றிகரமாக முடிந்த பின்னர் தான் மனிதர்கள் நிலவுக்கு நாசா மீண்டும் அனுப்பும். வரும் 2025இல் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் தான் அது மனிதர்களை நிலவுக்கு அனுப்ப உள்ளது.

English summary
NASA's Orion Craft Nasa planning to send humans to moon again: NASA's Orion Craft latest updates in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X