ஆனந்த் சீனிவாசன் சொல்வது இருக்கட்டும்.. "தங்கம்" எப்படி உருவானது தெரியுமா? படிக்கவே பயங்கரமா இருக்கே
வாஷிங்டன்: தங்கம் என்பது இப்போது ரொம்பவே முக்கியமான அதிக மதிப்புள்ள உலோகமாக இருக்கும் நிலையில், தங்கம் எப்படி உருவாகி இருக்கும் என்பது குறித்து ஆய்வாளர்கள் முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
உலகில் அதிக மதிப்புள்ள உலோகங்களில் ஒன்றாகத் தங்கம் இருக்கிறது. இப்போதும் தங்கம் இருந்தால் அதை எந்தவொரு கரன்சியாகவும் மாற்ற முடியும். இதன் காரணமாகவே தங்கத்தைப் பொதுமக்கள் சேகரித்து வருகின்றனர்.

பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் எப்போதும் தங்கச் சேமிப்பை வலியுறுத்துவார். ஒவ்வொரு குடும்பம் குறைந்தது 400 கிராம் தங்கத்தை வைத்திருக்க வேண்டும் என்பது அவரது வாதம்.
தங்கம்: தங்கம் இந்தளவுக்கு முக்கியம் சரி.. இது உருவானது எப்படி என்பது பலருக்கும் தெரியாது. இதற்கிடையே இந்த பெரிய கேள்விக்கான விடையை ஆய்வாளர்கள் இப்போது கொடுத்துள்ளனர். இந்த பிரபஞ்சத்தில் மிகவும் சக்திவாய்ந்த வெடிப்பு போல ஒன்று நடக்கிறது என கற்பனை செய்து பாருங்கள். இரண்டு அதி அடர்த்தியான நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்கிறது. இந்த வலுவான மோதல் என்பது மிகவும் வலிமையானதாக இருந்தது மட்டுமின்றி அது ஸ்பேஸ் டைமையும் பாதித்துள்ளது.
இதுவே தங்கத்தை உருவாக்கியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த 2017இல் காணப்பட்ட இந்த பிரபஞ்ச நிகழ்வு என்பது ஏதோ ஒரு சாதாரண நிகழ்வு இல்லை.. நம்மிடம் இருக்கும் முக்கியமான அதிக விலை கொண்ட உலோகம் எப்படி உருவானது என்பதையும் தெரிந்து கொள்ள இது உதவுகிறது. இரண்டு கிரகங்கள் இப்படி மோதிக் கொள்ளும் போது உருவான தங்கம் தான் நமது பூமியில் இப்போது எடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கிலோனோவா வெடிப்பு: இதனை ஆய்வாளர்கள் கிலோனோவா வெடிப்பு என்று அழைக்கிறார்கள். இந்த நிகழ்வு பிரபஞ்சம் குறித்த முக்கிய உண்மையைக் கண்டறிய உதவி இருக்கிறது. இந்,த வெடிப்பால் உருவான தங்கத் தூசிகள் அங்கே வான்வெளியில் சுற்றி வருகிறது. இதை மேக்ஸ் பிளாங்க் நிறுவனம் மற்றும் பாட்ஸ்டேம் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பூமியில் உருவான தங்கம் இப்படி தான் உருவாகி இருக்கும் என ஆய்வாளர்களும் கருதுகின்றனர்.
இது குறித்து ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், "தொலை தூரத்தில் இந்த இரு கிரகங்களும் மோதிக் கொண்ட நிலையில், இதை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். இதில் கிடைக்கும் துல்லியமான தகவல்கள் பூமியில் உள்ள தங்கம் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள உதவும். தங்கத்தின் தோற்றம் மட்டுமின்றி இது பிரபஞ்சத்தின் விரிவாக்கம் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதலின் போது எந்த அளவிற்கு கனமான பொருட்கள் உருவானது என்பதை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது.
"ஒரு கிராம் ரூ.7500.." தங்கம் விலை அடுத்தாண்டு இப்படிதான் இருக்கும்.. போட்டு உடைத்த ஆனந்த் சீனிவாசன்
அதென்ன நியூட்ரான் நட்சத்திரம்: நியூட்ரான் நட்சத்திரம் என்பது ஒரு சூப்பர்நோவா வெடிப்பில் ஒரு நட்சத்திரத்தின் வாழ்க்கையின் முடிவில் உருவாகும் ஒரு மிகத் தீவிரமான அடர்த்தியான பொருளாகும். மற்ற சிறிய பொருட்களைப் போலவே, சில நியூட்ரான் நட்சத்திரங்களும் சூரியனநை போல ஒரு மைய நட்சத்திரத்தைச் சுற்றி வராமல் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன. இரண்டிற்கும் ஈர்ப்பு அலை இருக்கும் நிலையில், காலப்போக்கில் இதனால் ஆற்றலை அவை இழக்கின்றன.
அந்த நேரத்தில் இரண்டும் இறுதியில் மோதுகின்றன. இந்த உயர் ஆற்றல் மோதல்கள் தான் தங்கத்தை உருவாக்கி இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உண்மையில், நியூட்ரான் நட்சத்திரங்களை மோதும் போது அணுக்கருக்களில் இருப்பதைத் தாண்டி அடர்த்தியான பொருட்களை உருவாக்கும். தங்கம் மட்டுமின்றி பல பொருட்களை இந்த கிலோனோவா வெடிப்பு உருவாகி இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications