"2 நொடி.." வாட்ஸ்அப்பில் என்ன போட்டோ கேட்டாலும் தட்டி தூக்கும் மெட்டா ஏஐ! மார்க் போடும் மெகா பிளான்
வாஷிங்டன்: உலகில் இப்போது ஏஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மெட்டா நிறுவனமும் இப்போது இந்த துறையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளில் இந்த மெட்டா ஏஐ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாட் ஜிபிடிக்கு போட்டியாக மார்க் ஜூக்கர்பெர்க் இந்த மெட்டா ஏஐ மாடலை இறக்கியுள்ளார். இதில் நாம் விருப்பம் போல எப்படி போட்டோக்களை உருவாக்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
உலகில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடையும். அதுபோல இப்போது ஏஐ சார்ந்த தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது.

குறிப்பாக சாட்ஜிபிடி வருகை ஏஐ துறையை மொத்தமாகப் புரட்டிப் போட்டு இருக்கிறது என்றே சொல்லலாம். அதன் பிறகு பல்வேறு நிறுவனங்களும் ஏஐ துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
மெட்டா ஏஐ: கூகுள் நிறுவனம் தனது ஜெமினி ஏஐ மூலம் முயன்றது. இருப்பினும், சாட்ஜிபிடி அளவுக்குக் கூகுள் நிறுவனத்தால் யூசர்களை பிடிக்க முடியவில்லை.. இதற்கிடையே இந்த லிஸ்டில் இப்போது மெட்டா ஏஐ நிறுவனமும் இணைந்துள்ளது. மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் தளங்களிலும் இப்போது மெட்டா ஏஐ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மற்ற ஏஐ தளங்களைப் போலவே இந்த மெட்டா ஏஐ மாடலையும் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம். கடந்த மாதம் இது சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது அனைவருக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளிலும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அதிலேயே ஏஐ வசதி இருப்பது பயனாளர்களை அதிகரிக்கும்.. இது ஏஐ பயன்பாட்டை மொத்தமாகப் புரட்டிப் போடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி: இந்த மெட்டா ஏஐ வசதியை யூஸ் செய்வது ரொம்பவே ஈஸி.. நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்தால்.. அதில் கீழே வலது புறம் நீலம் மற்றும் ஊதா நிறத்தில் வட்டம் தெரியும்.. அதை கிளிக் செய்தால் போதும் ஈலியாக நாம் மெட்டா ஏஐ மாடலுடன் சாட் செய்யலாம்.. வாட்ஸ்அப் மட்டுமின்றி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் தளங்களிலும் இதே வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாம். தற்போது ஆங்கிலம், பிரெஞ்சு, என்று 13 மொழிகளில் மட்டுமே மெட்டா ஏஐ வேலை செய்கிறது. விரைவில் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெகா பிளான்: சரி விஷயத்திற்கு வருவோம்.. இந்த மெட்டா ஏஐ மூலம் நம்மால் இமேஜ்களையும் உருவாக்க முடியும். சாட் ஜிபிடி உள்ளிட்ட மற்ற ஏஐ மாடல்களில் இமேஜ் உருவாக்குவது கடினம்.. அல்லது ஏஐ தளங்களில் இமேஜ் உருவாக்க நாம் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதேநேரம் இந்த வசதியை நாம் மெட்டா தளத்தில் இலவசமாகவே செய்யலாம். இதன் மூலம் அதிகளவில் யூசர்களை பெற முடியும் என்றே மெட்டா நம்புகிறது.
உங்களுக்கு எப்படி இமேஜ்கள் வேண்டும் என சொன்னால் போதும்.. அதை நொடிகளில் மெட்டா ஏஐ உருவாக்கித் தரும். உதாரணத்திற்குச் சென்னை கடற்கரையில் ஒருவர் இருப்பது போன்ற படம் வேண்டும் என கேட்டோம். இந்த படம் தான் வந்தது. இதுபோல நீங்கள் என்ன மாதிரியான படம் வேண்டும் எனச் சொன்னாலும் உடனடியாக அந்த படம் வருகிறது. அதை நீங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழலாம்.

உங்கள் படம்: அதேநேரம் தற்போதைய சூழலில் உங்கள் மொபைலில் இருக்கும் போட்டோக்கள், உங்கள் முகப்பு படம் ஆகியவற்றை இந்த மெட்டா ஏஐ மாடலால் எடுத்துக் கொள்ள முடியாதாம். எனவே, நீங்கள் உங்களைப் போன்ற ஏஐ இமேஜ் அல்லது உங்களின் அனிமேஷன் முகத்தை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதை விவரிக்க வேண்டும். அதை வைத்து மெட்டா இமேஜ்களை உருவாக்கித் தருகிறது.
-
ஐஆர்சிடிசி கேண்டீன்களில் ஏஐ கேமரா.. ரயில்களில் உணவு சாப்பிடுபவர்கள் அறிய வேண்டியவை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications