அமெரிக்காவில் குறைவான வாக்கு பெற்றாலும் அதிபர் ஆகலாம் தெரியுமா.. இதுதான் அங்கு தேர்தல் முறையாம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு டிரம்ப் மற்றும் பைடன் இடையே கடும் போட்டி நடக்கிறது. ஆனால், அங்கு நடக்கும் தேர்தலில் மக்கள் நேரடியாக அதிபரைத் தேர்வு செய்ய மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா.. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் எப்படி நடக்கும்.. அதிபர் எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்துப் பார்க்கலாம்.

அமெரிக்காவைப் பொறுத்தவரைத் தேர்தல் என்பது மிகவும் நீண்ட நெடிய நடைமுறை. அங்குத் தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்பே தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிடும்.

US Presidential Election 2024 Joe Biden Donald Trump

அங்கு ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள் மட்டுமே பிரதான கட்சிகளாக உள்ளனர். வேறு சில சிறு கட்சிகள் இருந்தாலும் கூட இந்த இரு கட்சிகளைச் சேர்ந்த ஒருவர் தான் வழக்கமாக ஆட்சியைப் பிடித்துள்ளனர்.

அதிபர் தேர்தல்: எனவே, இந்த இரு கட்சி சார்பிலும் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள். அதன் பிறகு பிரச்சாரம் மற்றும் நிதி திரட்டும் நிகழ்ச்சிகளைத் தொடங்குவார்கள். போதியளவில் நிதி கிடைக்கவில்லை என்றால் சிலர் அப்போதே தேர்தலில் இருந்து பின்வாங்குவார்கள்.

அடுத்த கட்டமாக உட்கட்சி தேர்தல் நடக்கும். அதாவது உதாரணத்திற்கு ஜனநாயக கட்சி சார்பில் 4 பேர் போட்டியிடுகிறார்கள் என்றால்.. அவர்கள் 4 பேருக்கு இடையே மட்டும் உட்கட்சி தேர்தல் நடக்கும். அதில் ஜனநாயக கட்சியில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். மேலும், இந்த தேர்தல் மாகாணம் வாரியாக நடத்தப்படும். இதன் இறுதியில் ஒரு கட்சியில் யாருக்கு ஆதரவு அதிகம் என்பது தெரிந்துவிடும். அவரே அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

உட்கட்சி தேர்தல்: நடப்பு ஆண்டில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பைடன், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் உட்கட்சி தேர்தலில் வென்றுள்ளனர். இந்த நடைமுறை வரை இப்போது நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக இரு கட்சி சார்பில் தேசிய மாநாடு நடத்தப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அதற்கு முன்பாக அல்லது மாநாடு சமயத்தில் அதிபர் வேட்பாளர்கள் தங்கள் துணை அதிபர் வேட்பாளர்களைத் தேர்வு செய்வார்கள். இதை அவர்கள் Running mate எனக் குறிப்பிடுவார்கள்.

குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு வரும் ஜூலை 15-18 தேதிகளில் விஸ்கான்சினில் நடக்கிறது. அதில் டிரம்ப் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். அதேபோல ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு வரும் ஆகஸ்ட் 19-22 தேதிகளில் இல்லினாய்ஸ் நடக்கும் நிலையில், அங்கு பைடன் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

அடுத்து என்ன: அதைத் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் இவர்கள் இறங்குவார்கள். மாகாணம் வாரியாக சென்று பிரச்சாரம் செய்வார்கள். மேலும் விவாதத்திலும் கூட பங்கேற்பார்கள். இப்போது டிரம்ப், பைடன் இடையே ஒரு விவாதம் நடந்துள்ளது. மேலும் சில விவாதங்கள் கூட நடக்கலாம். ஆனால், இரு அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே கண்டிப்பாக விவாதம் நடக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

பிரச்சாரம் முடிந்த பிறகு நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும். தேதி எதுவாக இருந்தாலும் அங்கு எப்போதுமே நவம்பர் மாதம் முதலாம் வியாழக்கிழமை தான் தேர்தல் நடக்கும். வாக்குச் சீட்டு அடிப்படையில் இந்தத் தேர்தல் நடத்தப்படும்.

வாக்களிப்பது அதிபருக்கு இல்லை: அடுத்து முக்கியமானது வாக்குப்பதிவு.. நம்மில் பெரும்பாலானோர் நினைப்பதைப் போல அமெரிக்காவில் மக்கள் நேரடியாக அதிபருக்கு வாக்களிக்க மாட்டார்கள். மாறாக electors எனப்படுவோருக்குத் தான் வாக்களிப்பார்கள். அவர்கள் எல்லாம் இணைந்தே அதிபரைத் தேர்வு செய்வார்கள். இவர்கள் electoral college முறையில் அதிபரைத் தேர்வு செய்வார்கள். அவர்கள் அளிக்கும் வாக்குகளை electoral votes என்பார்கள்.

உதாரணமாக அமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நியூ ஜெர்சி மாகாணத்தில் மொத்தம் 14 electoral votes இருக்கிறது. இதுபோல ஒவ்வொரு மாகாணத்திற்கும் அந்தந்த மாகாணத்திற்கு ஏற்ப electoral votes வழங்கப்படும். அதிபர் தேர்தலில் பைடனின் ஜனநாயக கட்சி நியூ ஜெர்சி மாகாணத்தில் அதிக வாக்குகளை வென்றால் இந்த 14 electoral votes ஜனநாயக கட்சிக்கே சென்றுவிடும். ஜனநாயக கட்சியை விடக் குடியரசு கட்சி ஒரு வாக்கு குறைவாகப் பெற்றாலும் அவர்களுக்கு ஒரு electoral votes கூட கிடைக்காது.

குறைவான வாக்குகளை பெற்று வெற்றி: இதுபோல அங்குள்ள ஒவ்வொரு மாகாணத்திற்கும் மக்கள் தொகை அடிப்படையில் electoral votes வழங்கப்படும். மொத்தம் 538 electoral votes இருக்கும் நிலையில், அதில் 270 electoral votes பெறும் கட்சியே வென்றதாக அறிவிக்கப்படும். அந்தக் கட்சியின் அதிபர் வேட்பாளரே அதிபராகத் தேர்வாவார்கள். இந்த முறை இருப்பதாலேயே சில சமயம் அதிகபட்ச வாக்குகளை ஒருவர் வென்றாலும் electoral votes அடிப்படையில் மற்றொருவர் அதிபராவார்கள். உதாரணமாகக் கடந்த 2016இல் டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் 2% அதிக வாக்குகளைப் பெற்றார். இருப்பினும் electoral votes அடிப்படையில் டிரம்ப் அதிபரானார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+