"3ஆம் உலக போர்.." அவ்வளவுதான் உலகிற்கு "பேரழிவு.." பகீர் படங்களால் நெட்டிசன்கள் ஷாக்! என்ன நடக்கும்
வாஷிங்டன்: அடுத்து மூன்றாம் உலகப் போர் எப்போது நடக்கும் என்பது குறித்த சில பகீர் தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
டைம் டிராவல் செய்து பல ஆண்டுகள் முன்னாலும் பின்னாலும் செல்லும் பல கதைகளை நாம் பார்த்திருப்போம். கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் அதில் இணைக்கும் நபராக ஹீரோ இருப்பார்கள்.

ஆனால், இதெல்லாம் வெறும் திரைப்படங்களில் மட்டுமே நடக்கும். நிஜத்தில் டைம் டிராவலுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்பதே இங்கே பலரது கருத்தாக இருக்கிறது. ஆனால், சிலர் தங்களை தாங்களே டைம் டிராவலர்கள் என்றும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
தாங்கள் எதிர்காலத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் தங்களுக்கு வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியும் என்றும் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த செய்தியும் அப்படிச் சொல்லிக் கொள்ளும் ஒருவர் பற்றியது தான். மூன்றாம் உலகப் போர் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ள அவர், 3ஆம் உலகப் போர் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் இதனால் மனிதர்கள் அனைவரும் பூமியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று தெரிவித்தார்.
Timevoyaging என்ற பெயரில் இருக்கும் டிக்டாக் யூசர் தான், எதிர்கால நிகழ்வுகள் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவரை பல ஆயிரம் பேர் பின்தொடரும் நிலையில், வரும் காலத்தில் போர் எப்போது நடக்கும், போர் எப்படி ஆரம்பிக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தான் வரும் காலத்தில் இருந்து வந்துள்ளதாகவும் வரும் கால படங்களை இப்போது பகிரக் கூடாது என்ற சட்டம் இருப்பதாலே வரும் காலம் குறித்து தன்னிடம் இருக்கும் படங்களைப் பகிரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு வீடியோவில் அவர், "அனைவரும் கவனிக்கவும். நான் தான் ரியல் டைம் டிராவலர். மூன்றாம் உலகப் போர் குறித்து என்னிடம் பலரும் கேட்கிறீர்கள். அது தொடர்பான படத்தை நான் உங்களுடன் முதல்முறையாகப் பகிரப் போகிறேன்" என்று சொல்லி சில படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
முதல் படத்தில் அடர்த்தியான, சாம்பல் நிற புகை மேகங்களால் மூடப்பட்ட ஒரு நகரத்தில் மிகப் பெரிய வெடி விபத்து ஏற்படுவது போன்ற படம் இருக்கிறது. அடுத்த படம் ஆய்வகம் ஒன்றில் சோதனை முறையில் வெடிப்பு நடப்பது போன்ற படம் இருக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் பல போட்டோக்களில் உலகெங்கும் வெடிப்புகள் நடப்பது போன்ற படங்கள் இருக்கிறது.
இதில் கடைசி படம் படங்கள் பூமி முழுவதுமாக அழிக்கப்பட்ட பிறகு எப்படி இருக்கும் என்பதை விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்டது போன்ற படமாக இருக்கிறது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் பல வித கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மூன்றாம் உலகப் போர் குறித்து பலரும் பல வித கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அணு ஆயுதங்கள் இப்போது அதிகரித்துவிட்ட நிலையில், இந்த நேரத்தில் 3ஆவது உலகப் போர் ஏற்பட்டால் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றே சொல்லப்படுகிறது. உலகப் போர் குறித்து பலரும் பல வித கருத்துகளைத் தெரிவித்தாலும், நீரினால் தான் 3ஆவது உலகப் போர் இருக்கும் என்பதைப் பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்கிறார்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications