அம்மாடி இது என்ன.! தலைகுப்புற கவிழ்ந்த 40,000 கிலோ திமிங்கலம்.. பார்த்தவுடன் மூச்சே நின்னு போச்சு
வாஷிங்டன்: ஹம்ப்பேக் திமிங்கலம் ஒன்று நீரில் அப்படியே தலைக்குப்புற இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நமது இந்த உலகம் பல ஆச்சரியங்களையும் வினோதங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. ஒவ்வொரு சமயமும் நாம் ஒரு கேள்விக்கு விடையைக் கண்டுபிடிக்கும் போது, அதைச் சுற்றி 10 கேள்விகள் வருகிறது. இப்படிப் பல சிறப்புகளைக் கொண்டதாக உலகம் இருக்கிறது.

அதிலும் குறிப்பாகக் கடல்களை நாம் சொல்லலாம். விண்வெளி குறித்து அறிந்துள்ள அளவுக்குக் கூட நமது பூமியில் இருக்கும் கடல் குறித்தும் கடலில் இருக்கும் உயிரினங்கள் குறித்தும் நமக்கு முழுமையாகத் தெரியாது. இதனால் கடலில் நடக்கும் பல நிகழ்வுகள் நமக்கு மிகப் பெரிய வியப்பைக் கொடுப்பதாகவே அமைகிறது.
திமிங்கலம்: இதற்கிடையே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் ஒருவர் தனது குட்டி படகை எடுத்துக் கொண்டு கடலுக்குத் தனியாகச் சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் கண்ட காட்சியை முதலில் அவராலேயே நம்ப முடியவில்லை. மேலும், நடுக்கடலில் அவர் எடுத்த வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பிராடி மோஸ் என்ற அந்த நபர் தான் இந்த வீடியோவை எடுத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்தால் நமக்கே ஒரு நொடி இதயம் நின்றுவிடும்.
அவர் கடலின் நடுவில் ஒரு ஹம்ப்பேக் திமிங்கலத்தை வீடியோவாக எடுத்துள்ளார். அவர் தனியாகக் குட்டி படகில் சென்று கொண்டிருந்த நிலையில், அப்போது தான் இந்த அதிசயத்தைப் பார்த்துள்ளார். அங்குப் பெருங்கடலில் இருந்த ஹம்ப்பேக் திமிங்கலம் ஒன்று தலைக்குப்புற நீருக்கு அடியில் இருந்துள்ளது. இதைப் பார்த்தவுடன் அவராலேயே இந்த காட்சியை நம்ப முடியவில்லை. வேகமாக அவர் அதன் அருகில் சென்றும் பார்க்கிறார்.
இதயமே நின்றுவிடும் போல: இந்த காட்சியைப் பார்த்தவுடன் அவர் அந்த வீடியோவில், "என் இதயம் இப்போது மிக வேகமாகத் துடிக்கிறது.. நின்று போகும் அளவுக்கு வேகமாகத் துடிக்கிறது.. இதை என்னால் நம்பவே முடியவில்லை. இது ஒரு திமிங்கலத்தின் வால் என்று நான் நினைக்கிறேன்.. இது இப்படி தலைக்குப்புற நின்று கொண்டிருக்கிறது. இது எங்கும் செல்லாமல்.. அப்படியே ஆடாமல் அசையாமல் இங்கேயே இருக்கிறது. இதை என்ன சொல்வது என்று கூட எனக்குத் தெரியவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

திமிங்கலம் இப்படி இருக்கும் போது நீருக்கு அடியில் இருந்தும் அவர் வீடியோ எடுத்துள்ளார். அதில் திமிங்கலம் அப்படியே தலைக்குப்பற இருக்கிறது. அதன் அருகில் அதன் குட்டி மெல்ல நீந்தி வருகிறது. இந்த நபர் கையோடு டிரோன் கேமரா ஒன்றையும் எடுத்துச் சென்ற நிலையில், வானத்தில் இருந்தும் இந்த வீடியோவை அவர் பதிவு செய்துள்ளார். இந்த காட்சி பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறது.
ஏன் இப்படிச் செய்கிறது: இதனை "tail sailing" என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஹம்ப்பேக் திமிங்கலம், சாம்பல் திமிங்கலங்கள், வில்ஹெட் திமிங்கலங்கள் மற்றும் ஆகியவை பொதுவாக இப்படிச் செய்யும். திமிங்கலம் ரொம்பவே அரிதாகவே இப்படிச் செய்யும். பொதுவாக திமிங்கலம் ஓய்வு எடுக்கும் சமயத்தில் தான் இப்படி இருக்குமாம்.
ஹம்ப்பேக்குகள் இப்படி தலைக்குப்புற உறங்கும் நிலையில், அதன் குட்டி இதைப் பார்த்துக் கொள்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உடலின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவே திமிங்கலம் இப்படிச் செய்யும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஹம்ப்பேக் வகை திமிங்கலம் ஆகும். இந்த ஹம்ப்பேக் திமிங்கலங்கள் பொதுவாக 45 முதல் 50 வயது வரை வாழக் கூடியது. இது உலகெங்கும் இருக்கும் பல்வேறு கடல் மற்றும் பெருங்கடல்களிலும் கண்டறியப்படும். 50 முதல் 56 அடி வரை வளரக் கூடிய இந்த ஹம்ப்பேக் திமிங்கலங்கள் அதிகபட்சம் 44 ஆயிரம் டன் வரை எடை இருக்கும். இத்தனை பெரிய திமிங்கலம் துளியும் அசையாமல் அப்படியே தலைகீழாக இருக்கும் வீடியோ இப்போது டிரெண்டாகி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications