நடுவானில் எமெர்ஜென்சி டோரை திறந்தது ஏன்? காரணம் தான் அல்டிமேட்.. கேட்டதும் ஸ்டன் ஆன போலீசார்
வாஷிங்டன்: 650 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் எமெர்ஜென்சி டோரை ஒருவர் திறந்துவிட்டார். இதனால் காற்று விமானத்திற்குள் புகுந்து பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த நிலையில் எமெர்ஜென்சி டோரை திறந்தது ஏன் என போலீசார் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் போலீசாரை ஸ்டன் அடைய செய்தது.
பயணிகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் சேர வேண்டிய இடங்களுக்கு கொண்டு செல்வது விமானம் தான். பேருந்து, ரயில் பயணங்களுடன் ஒப்பிடும் போது விமான பயணம் என்பது மிகவும் சொகுசானது மட்டும் இன்றி பாதுகாப்பனதும் கூட. ஆனால், கடந்த சில மாதங்களாவே விமானங்களில் நடைபெறும் சம்பவங்கள் விமான பயணங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்று கேள்வியை எழுப்பும் வகையில் உள்ளது.

குறிப்பாக பயணிகள் சிலர் விமானங்களில் அத்து மீறி நடந்து கொள்வதும் விமான பணியாளர்களுடன் ரகளையில் ஈடுபட்டு பிற பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும் நடக்கும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி ஒருவர் மீது சக பயணி குடிபோதையில் சிறு நீர் கழித்ததில் தொடங்கி.. எமெர்ஜென்சி கதவை திறக்க முயன்றது வரை தொடர்ந்து அடுத்தடுத்த சம்பவங்கள் தற்போது முன்பை விட அதிகம் நடைபெற்று வருகிறது.
சர்வதேச அளவிலும் இது போன்ற விவகாரங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தான் தென்கொரியாவின் சியோலில் விமானம் ஒன்று தரையிறங்க இருந்து சிறிது நேரத்திற்கு முன்பாக பயணி ஒருவர், விமானத்தின் எமெர்ஜென்சி கதவை திறந்து விட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதாவது, சியோலுக்கு தென்கிழக்கே சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் டேகு சர்வதேச விமான நிலையம் உள்ளது.

இந்த விமான நிலையத்தில் ஆசியானா ஏர்லைன்சுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ321-200 தரையிறங்க இருந்தது. 200 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த இந்த விமானத்தில் பயணி ஒருவர் திடீரென எமெர்ஜென்சி கதவை திறந்து விட்டார். விமானம் சுமார் 650 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது இந்த நிகழ்வு நடைபெற்றதால் பயணிகள் பலரும் பீதியில் உறைந்தனர். சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. 9 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விமானத்தில் எமெர்ஜென்சி கதவை திறந்து விட்ட பயணியை பிடித்து அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த பயணி கூறிய வினோத காரணம் ஒரு நிமிடம் போலீசாரையே திகைக்க வைத்து இருக்கிறது.
30- வயது மதிக்கத்தக்க அந்த நபர் கூறுகையில், விமானத்தில் அசவ்கர்யமாக உணர்ந்ததாகவும், விமானத்தை விட்டு உடனே இறங்க வேண்டும் என்பதற்காக எமெர்ஜென்சி கதவை திறந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும் சமீபத்தில் வேலை இழந்ததால் மன அழுத்தத்த்தில் இருந்ததாகவும் போலீசாரிடம் விசாரணையின் போது கூறியிருக்கிறார்.

எனினும் அவர் கூறுவது உண்மைதானா? அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா? எனவும் போலீசார் சந்தேகிப்பதாக தெரிகிறது. விசாரணை நீடிப்பதாகவும் விசாரணை முடிந்த பிறகு அந்த நபரை கைது செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென எமெர்ஜென்சி கதவு திறந்து விடப்பட்டதால், விமானத்தில் காற்று குபு குபுவென்று வீசும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது. அந்த வீடியோவில், நடுவானில் விமானத்தின் ஜன்னல் திறக்கப்பட்டு அதன் வழியே காற்று மிக வேகமாக உள்ளே வருகிறது. இதனால் பயணிகள் சிலர் மூச்சு விடுவதற்கு சிரமப்படுவது கூட தெளிவாக தெரியும் வகையில் உள்ளது.

தென் கொரியாவில் விமானம் சுமார் 700 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது பயணி ஒருவர் திடீரென எமெர்ஜென்சி கதவை திறந்து விட்டார். இதனால், பயணிகள் சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் கூட அனுமதிக்கபபட்டனர். விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. இந்த நிலையில், எமர்ஜென்சி கதவை திறந்து விட்டதற்கு அந்த நபர் கூறிய காரணத்தை பற்றி இஅங்கே பார்ப்போம்.












Click it and Unblock the Notifications