தாய்லாந்து - கம்போடியா சண்டை நிறுத்தம்? பேச்சுவார்த்தைக்கு ஓகே சொல்லிட்டாங்க! ஒரே போடாக போட்ட டிரம்ப்
வாஷிங்டன்: தாய்லாந்தும் கம்போடியாவும் அமைதியை எதிர்பார்க்கின்றன என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இருநாடுகளும் சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால், தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட போர் பதற்றம் விரைவில் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் 817 கிலோ மீட்டர் தொலைவிற்கு எல்லையை பகிர்ந்து கொள்ளும் நிலையில், இருநாட்டின் எல்லையில் உள்ள புராதன கோயிலுக்கு இருநாடுகளும் உரிமை கோரி வருகின்றன.

தாய்லாந்து கம்போடியா மோதல்
அதாவது, இந்த இரு நாடுகளின் எல்லையில் தா முயென் தாம் என்ற கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தம் கொண்டாடுவதில்தான் பிரச்சினையானது நீடிக்கிறது. கடந்த 1959 ஆம் ஆண்டில் இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றன. இதில், கோயில் கம்போடியாவுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வந்தது. ஆனால் இதனை ஏற்க மறுக்கும் தாய்லாந்து, தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று தொடர்ந்து உரிமை கோரி வருகிறது.
இந்த பிரச்சினை காரணமாக கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், கடந்த 25 ஆம் தேதி இருநாடுகளுக்கும் இடையே மோதல் பகிரங்கமாக வெடித்தது. தா முயென் தாம் கோயில் வளாகத்தில் கம்போடிய ராணுவத்தின் ட்ரோன்கள் பறந்ததாகவும், அந்த நாட்டின் ராணுவ வீரர்கள் கோயிலை நோக்கி முன்னேறியதாகவும் சொல்லப்படுகிறது.
பதற்றத்தை தணிக்க டிரம்ப் பேச்சுவார்த்தை
இதையடுத்து, தாய்லாந்து, கம்போடிய ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தாய்லாந்து தரப்பில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், கம்போடியாவில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இருநாடுகளும் கூறியுள்ளனன. தாய்லாந்து சட்ட விரோதமாக ராணுவ அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், இதனை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்றும் கம்போடியா கூறி வருகிறது.
தாய்லாந்து எல்லையோரத்தில் உள்ள 8 இடங்களில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தியது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டே சென்ற நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் தலையிட்டு பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-
சண்டை நிறுத்தத்துக்கு சம்மதம்
தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி போர் நிறுத்தத்தை எதிர்பார்க்கின்றன. நான் கம்போடியா பிரதமருடன் பேசினேன். தாய்லாந்து ஆக்டிங் பிரதமருடன் பேசியது தொடர்பாக அவரிடம் விவரித்தேன். அமெரிக்காவுடன் இருநாடுகளும் வர்த்தக உறவை கொண்டுள்ளன.
சண்டையை முடிவுக்கு கொண்டு வராமல் இருநாடுகளுடன் வர்த்தக பேச்சை தொடர்வது சரியாக இருக்காது என அமெரிக்கா கருதுகிறது. தற்போது இருநாடுகளும் சண்டை நிறுத்தம் தொடர்பாக உடனடியாக பேசுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. அனைத்து சரியாக சென்றால் அமைதி ஏற்பட்டு விடும்" என்று தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications