பொத்தென்று விழுவது போல சென்ற விமானம்.. மூன்றே நிமிடம்-15,000 அடி! அப்படியே உறைந்து போன பயணிகள்..ஷாக்
வாஷிங்டன்: நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது சில நிமிடங்களில் 15 ஆயிரம் அடிக்கு கீழே வந்ததால் விமான பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்த திகில் அனுபவத்தை பயணி ஒருவர் பகிர்ந்துள்ளார். அதன் விவரங்களை பார்க்கலாம்.
அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென 15 ஆயிரம் அடி சட்டென்று கீழே இறங்கியதால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். பல பயணிகளும் ஆக்சிஜன் உதவியுடன் சுவாசித்து இருக்கின்றனர். நடுவானியில் திடீரென பயணிகளுக்கு கிலியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம்( 5916) ஒன்று புளோரிடா மாகாணத்தில் உள்ள சார்லோட் பகுதியில் இருந்து கெய்னெஸ்வில்லே நகருக்குசென்று கொண்டிருந்தது.

இந்த விமானம் புறப்பட்டு நடு வானில் பறந்து கொண்டிருந்துள்ளது. புறப்பட்டதில் இருந்து சுமார் 43 நிமிடங்கள் கழித்து விமானம் நடுவானி பறந்துகொண்டிருந்த போது வானில் ஏற்பட்ட அழுத்த பிரசினைகளால் விமானம் திடீரென கீழ் நோக்கி வந்துள்ளது. சுமார் 3 நிமிடத்திற்குள் 15 ஆயிரம் அடி அளவுக்கு விமானம் சர்ரென இறங்கியுள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பயணிகள் பலரும் மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க விமானத்தில் இருந்த ஆக்சிஜன் மாஸ்க்கை பயன்படுத்தி சுவாசித்துள்ளனர்.
இது தொடர்பாக விமானத்தில் பயணம் செய்த புளோரிடாவில் உள்ள பல்கலைக்கழக பேராசிரியர் ஹர்ரிசன் ஹவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், மிகவும் மோசமான அனுபவமாக இந்த பயணம் அமைந்தது. புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை. எரிந்த வாசனையும் பலத்த சத்தமும் கேட்டது. நான் மிகவும் பயந்து விட்டேன். விமான ஊழியர்கள் நெருக்கடியான நேரத்திலும் சிறப்பாக செயல்பட்டனர்" என்றார்.
பிளைட் அவேர் பகிர்ந்துள்ள தரவுகளின் படி, விமானம் வெறும் 11 நிமிடங்களில் 20 ஆயிரம் அடி கீழே வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - அழுத்த பிரச்சினை ( pressurisation issue) காரணமாக விமானத்தை பத்திரமாக தாழ்வான உயரத்திற்கு விமானி கொண்டுவந்தார். பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகர்யங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நெருக்கடியான கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட எங்கள் ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications