நடுவானில் பாத்ரூம் சென்ற விமானி உயிரிழப்பு.. உள்ளே இருந்த 271 பயணிகள்.. அடுத்து என்ன நடந்தது! பகீர்
வாஷிங்டன்: நடுவானில் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென பைலட் ஒருவர் மரணமடைந்ததால் விமானத்தில் இருந்த பயணிகள் உறைந்து போனார்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நாம் பார்க்கலாம்.
இப்போது சர்வதேச அளவில் மிகவும் பாதுகாப்பான பயண முறையாக விமான பயணங்கள் இருக்கிறது. இப்போது நாடுகளுக்கு இடையே பயணிக்க விமானங்களே பிரதான ஆப்ஷனாக இருக்கிறது.

விமான விபத்துகள் ஏற்படும் வாய்ப்பும் இங்கே ரொம்பவே குறைவாக இருக்கிறது.. இதன் காரணமாகவே விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விமானி: இதற்கிடையே நடுவானில் விமானி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். விமானத்தின் உள்ள 271 பயணிகள் இருந்த நிலையில், அடுத்து நடந்த சம்பவங்கள் சினிமாவை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் மியாமியில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் சிலி நாட்டிற்கு 271 பயணிகளுடன் விமானம் புறப்பட்டுள்ளது. விமானம் கிளம்பிய 3 மணி நேரத்தில் பைலட்டிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.. அப்போது நடுவானில் பாத்ரூம் சென்ற விமானி திடீரென அப்படியே சரிந்துவிட்டார்.
அங்கிருந்த விமான குழு அவருக்கு முதற்கட்ட மருத்துவ உதவிகளை அளித்துள்ளனர். இருந்த போதிலும், அவரை மீண்டும் மீட்க முடியவில்லை. நடுவானில் விமானி திடீரென மயங்கிய நிலையில், அடுத்து என்ன செய்வது என்று அவர்கள் பதற்றமடைந்துள்ளனர். இருப்பினும், அங்கே இருந்த இணை விமானி விமானத்தை அவசர அவசரமாக பனாமாவில் தரையிறக்கியுள்ளனர்.. விமானம் தரையிறங்கிய உடன் மருத்துவக் குழு விமானியைப் பரிசோதனை செய்துள்ளது.
உயிரிழப்பு: இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கேப்டன் இவான் ஆண்டூர் என்ற விமானி தான் நடுவானில் உயிரிழந்துள்ளார். அவர் 25 வருட அனுபவமுள்ள ஒரு மூத்த விமானி ஆகும். விமானி உயிரிழந்த போதிலும், உதவி பைலட்கள் துரிதமாகச் செயல்பட்டு விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கியதால் மேலும் விமான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த விமான நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நேற்று 3 பைலட்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், விமானம் உடனடியாக பனாமாவில் உள்ள டோகுமென் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானியைக் காப்பாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் விமானம் தரையிறங்கும் போதே அவர் உயிரிழந்திருந்தார்
ஆழ்ந்த இரங்கல்: எங்கள் விமானத்தில் நடந்த இந்தச் சம்பவத்திற்கு வருந்துகிறோம்.. விமானியின் குடும்பத்திற்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 25 ஆண்டுகளாக அவரது அர்ப்பணிப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.. எங்கள் நிறுவனத்திற்கு அவர் அளித்த பங்களிப்பிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். விமானத்தில் பாதிக்கப்பட்ட விமானியின் உயிரைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்தோம்.. இருந்தும் காப்பாற்ற முடியவில்லை" என்றார்.
விமானி உயிரிழந்த நிலையில், மாற்று விமானியைக் கொண்டு விமானம் தொடர்ந்து சிலி நாட்டிற்கு இயக்கப்பட்டது. உயிரிழந்த பைலட் ஆண்டூருக்கு 56 வயது ஆகும். விமானத்தில் முதலுதவி தர போதிய உபகரணங்கள் இல்லை என்று விமானி ஒருவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications