Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவுக்கு சிக்கல்? சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கும் டிரம்ப்? தென்கொரியா செல்வதன் பின்னணி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புக்கு எதிராக சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா கைகோர்த்துள்ளன. சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் 3 நாடுகளின் தலைவர்களும் சந்தித்து பேசியது அமெரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி இந்த வரியை விதித்துள்ளார். அதேபோல் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பிரச்சனை செல்கிறது. இதுதவிர உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்யாவையும் அமெரிக்கா குறிவைத்து விமர்சனம் செய்து வருகிறது.

in-next-month-donald-trump-may-meet-china-president-xi-jinping-in-south-korea

இதற்கிடையே தான் டிரம்புக்கு எதிராக சீனா, ரஷ்யா, இந்தியா கைகோர்த்துள்ளன. இந்தியா, ரஷ்யாவுடன் நட்பாக உள்ளது. மாறாக சீனாவுடன் எல்லை பிரச்சனையில் மோதல் உள்ளது. ஆனால் டிரம்பின் வரி விதிப்பு சீனாவையும், இந்தியாவையும் ஓரணியில் இணைத்துள்ளது.

கதிகலங்கிய அமெரிக்கா

சமீபத்தில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அதேபோல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், பிரதமர் மோடி சந்திப்பை நடத்தினார். அதன்பிறகு ஜி ஜின்பிங் - விளாடிமிர் புதின் - பிரதமர் மோடி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து மாநாட்டில் பங்கேற்று பேசியது அமெரிக்காவை கதிகலங்க வைத்துள்ளது.

அமெரிக்காவுக்கு எதிராக இந்த 3 நாடுகளும் ஓரணியில் இணைந்து இருப்பதை டிரம்பால் சகித்து கொள்ள முடியவில்லை. இதனால் தான், ‛‛இருண்ட சீனா, இந்தியாவையும், ரஷ்யாவையும் அமெரிக்காவிடம் இருந்து பிரித்து விட்டது'' என்று நேற்று முன்தினம் டிரம்ப் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில் பதிவிட்டு புலம்பியிருந்தார்.

ஜி ஜின்பிங்கை சந்திக்கும் டிரம்ப்?

இப்படியான சூழலில் தான் தற்போது முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசலாம் என்று கூறப்படுகிறது. அதாவது அடுத்த மாதம் தென்கொரியாவில் ஏபிஇசி எனும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. தென்கொரியாவின் ஜியாங்ஜு நகரில் இந்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இதில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்க உள்ளார். அதேபோல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்திக்க உள்ளார். இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக டெனாால்ட் டிரம்ப் - ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேசலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கி உள்ளதாக சிஎன்என் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வர்த்தகம் பற்றி விவாதிக்க திட்டம்

அந்த செய்தியில், ‛‛டொனால்ட் டிரம்பும், ஜி ஜின்பிங்கும் அடுத்த மாதம் தென்கொரியாவில் சந்தித்து பேசலாம். இந்த வேளையில் இருநாடுகள் இடையோன வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகள் பற்றி விவாதிக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவுக்கு சிக்கலா?

அமெரிக்கா உடனான மோதல் காரணமாக நம் நாடு சீனாவுடன் கைகோர்த்துள்ளது. இப்படியான சூழலில் இந்த சந்திப்புக்கு நம் நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்துமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. ஆனால் இதுபற்றி சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறுகையில், ‛‛டிரம்ப் - ஜி ஜின்பிங்கை சந்தித்தாலும் இந்தியாவுக்கு சிக்கல் வராது. ஏனென்றால் சீனா ஒருபோதும் அமெரிக்காவை நம்பாது. குறிப்பாக அமெரிக்காவுக்கு சீனா தான் பரம எதிரி.

டிரம்பும் இதில் உறுதியாக உள்ளார். அதோடு டிரம்ப் ஈகோ பிடித்தவர். இதனால் எப்போது வேண்டுமானாலும் தனது நிலைப்பாட்டை மாற்றி சீனாவை தண்டிக்கலாம். இதனால் சீனா டிரம்பை நம்பாது. ஆனால் இந்தியா அப்படியில்லை. நம்பகமான நாடு. எல்லை பிரச்சனை இல்லாவிட்டால் இருநாடுகளின் உறவு சுமூகமாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+