72 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா - உச்சகட்ட அதிர்ச்சியில் அமெரிக்கா
வாஷிங்டன் : இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகை கொரோனா ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அமெரிக்காவில் மட்டும் சுமார் 72 லட்சம் குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் குழந்தைகள் மருத்துவ அகாடமி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கமும் இணைந்து நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் கோரதாண்டவம் அதிகரித்து உச்சபட்ட பாதிப்பை ஏற்படுத்தியது. அரசியல், பொருளாதாரம், சுகாதார கட்டமைப்புகளை அசைத்துப் பார்த்த கொரோனா தற்போது ஓராளவு குறைந்தாலும், ஓமிக்ரான் எனும் திரிபாக மாரி அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.
வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசியோடு பூஸ்டர் செலுத்தியவர்களுக்கும் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக அந்நாட்டில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

72 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா
இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் கொரோனா காரணமாக சுமார் 72 லட்சம் குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் 1 லட்சம் குழந்தைகளில் 9 ஆயிரத்து 562 பேர் கொரோனோ பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர் எனவும்,அமெரிக்காவில் இதுவரை 71 லட்சத்து 96 ஆயிரத்து 901 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஏஏசி எனப்படும் அமெரிக்காவின் குழந்தைகள் மருத்துவ அகாடமி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கமும் இணைந்து நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு
குறிப்பாக அமெரிக்காவின் 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக வைத்துக் கொண்டால் , அதில் பேர் குழந்தைகளே என்ற அச்சமூட்டும் தகவலும் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கடந்த 7நாட்களில் மட்டும், 1 லட்சத்து 64 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அளவு கடந்த வாரத்தில் கண்டறியப்பட்ட பாதிப்பை விட 25 சதவீதம் அதிகம் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தைகள் மரணம் குறைவு
அதே நேரத்தில் இந்த ஆய்வின் மூலம் சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம் ஒன்றும் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் கொரோனாவுக்கு பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை 0.27 சதவீதம் மட்டுமே, ஆனாலும் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் சுமார் 21 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் குழந்தைகளின் எண்ணிக்கை 4 சதவீதமாகவும்,
கொரோனா காரணமாக 18வது வாரங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமாக குழந்தைகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
Recommended Video

கண்காணிப்பு அவசியம்
தற்போது ஓமிக்ரான் தொற்றும் பரவி வரும் நிலையில் குழந்தைகளுக்கு ஏற்படும் நீண்ட கால கொரோனா பாதிப்பு குறித்தும், அவர்களின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன எனபது குறித்தும், தற்போது கிடைத்துள்ள தகவல்கள் மற்றும் ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையிலும் கண்காணிக்க வேண்டும் எனவும் அமெரிக்காவின் குழந்தைகள் மருத்துவ அகாடமி கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications