அமெரிக்காவில் பயங்கரம்.. பல்கலைக்கழகத்தில் திடீர் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி - 8 பேர் காயம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ரோட்தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அமெரிக்காவின் ரோட் தீவில் பிரவுன் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.இந்த பல்கலைக்கழகத்தில் 7,300 பேர் இளநிலை படிப்பையும், 3 ஆயிரம் பேர் பட்ட மேற்படிப்பையும் படித்து வருகின்றனர்.
தற்போது பல்கலைக்கழகத்தின் இறுதி தேர்வுகள் நடந்து வருகிறது. மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்த வேளையில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் கருப்பு நிற உடையில் நுழைந்த நபர் திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். கண்மூடித்தனமாக அவர் துப்பாக்கியால் சுட்டார். அதன்பிறகு அந்த நபர் வேகமாக வெளியேறிவிட்டார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார்? பின்னணி என்ன? என்பது பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. அந்த நபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுபற்றி மாகாண மேயர் பிரிட் ஸ்மெல்லி கூறுகையில், ‛‛இது துரதிர்ஷ்வசமானது. பிராவிடன்ஸ் நகரமும், ரோட் தீவின் மாகாணத்திலும் ஒருபோதும் நிகழக்கூடாத சம்பவம் நடந்துவிட்டது. பிற இடங்களில் நடக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி கேள்வி பட்டு இருக்கிறோம். இப்போது இங்கும் நடந்து விட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்ய நாங்கள் அனைத்து பலத்தையும் பயன்படுத்துவோம்'' என்றார்.
அமெரிக்காவில் தொடர்ந்து அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரி, நைட் கிளப் உள்பட அனைத்து பொது இடங்களிலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது. இதற்கு அமெரிக்காவில் பயன்பாட்டில் இருக்கும் அதிகப்படியான துப்பாக்கிகள் தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications