ஒரு பயணிக்காக விமானத்திற்குள் நடந்த வாக்கெடுப்பு.. கையை தூக்கி பங்கேற்ற பயணிகள்.. காரணம் இதுதான்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பயணி ஒருவர் விமானத்தில் ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார். அந்த பயணியை வெளியேற்றுவதற்காக விமான பயணிகள் கையாண்ட விதம் கவனம் பெறுவதாக அமைந்துள்ளது.
சமீப காலமாக விமானத்திற்குள் பயணிகள் வரம்பு மீறி செயல்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. நடுவானில் விமானம் சென்று கொண்டிருக்கும் போது சக பயணிகளுடன் சண்டையிடுவது..சிப்பந்திகளுடன் வாக்குவாதம் செய்வது, எமெர்ஜென்சி டோரை திறக்க முயற்சிப்பது, காக்பிட் அறைக்குள் செல்ல முற்படுவது விமான பயணிகளின் அத்துமீறல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

அதுபோல சில சமயங்களில் விமான சிப்பந்திகள் மீதும் புகார்கள் எழுந்து வருகின்றன. அண்மைக்காலமாகவே விமான பயணத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது வாடிக்கையாகி வரும் நிலையில், அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பயணி ஒருவர் விமானத்தில் ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார். அந்த பயணியை விமான பயணிகள் அனைவரும் சேர்ந்து வெளியேற்றி இருக்கிறார்கள்.
அதற்காக பயணிகள் கையாண்ட விதம் கவனம் பெறுவதாக அமைந்துள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்:- அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருந்து அட்லாண்டாவிற்க்கு விமானம் ஒன்று புறப்பட தயராக இருந்தது. இந்த விமானத்தில் பயணிகள் தங்களுக்கு ஒதுக்க்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து பயணத்திற்கு தயாராகி கொண்டு இருந்தனர். அப்போது ஒரு பெண் பயணி மட்டும் சீட் மாற்றக் கோரி ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அந்த பெண் பயணியின் செயல் பிற பயணிகளுக்கும் இடையூறாக தெரிந்தது. அந்த பெண் பயணியின் நடவடிக்கையால் கோபம் அடைந்த பிற பயணிகள் அவரை வெளியேற்ற முடிவு செய்தனர். இதற்காக விமான பயணிகளின் முடிவு கேட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது. அதாவது, ரகளையில் ஈடுபட்ட அந்த பெண் பயணியை வெளியேற்ற விரும்ப வேண்டும் என நினைக்கிறவர்கள் கைகளை தூக்கி தங்கள் சம்மதத்தை தெரிவிக்குமாறு பயணி ஒருவர் கேட்கிறார்.
அதன்பிறகு பயணியை வெளியே அனுப்ப உடன்படும் பயணிகளும் கைகளை தூக்கி ஆதரவை தெரிவிக்கின்றன. அதன்பிறகு பயணியை வெளியே அனுப்பிய பிறகு விமானம் புறப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பயணியை வெளியேற்றும் விவகாரத்தில் கூட ஜனநாயகத்தை கடைபிடித்து இருக்கிறார்களே என நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications