"சர்வாதிகாரம்!" இந்தியாவுக்கு அவங்க சொந்த பிரச்னைகளே நிறைய இருக்கு.. சொல்கிறார் ஜோ பைடன்.. என்னாச்சு
வாஷிங்டன்: உக்ரைன் போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், பல விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் பைடன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ஜனநாயகக் கட்சி சார்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பைடன் கலந்து கொண்டார்,
இந்த நிகழ்ச்சியில் பேசிய பைடன் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். மேலும், இந்தியா குறித்தும் சில கருத்துகளைத் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் பைடன்
அமெரிக்க அதிபர் பைடன் பேசுகையில், "குவாட் நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை ஒன்றிணைக்கப் போகிறேன் என்று சீன அதிபரிடம் நான் கூறினேன். அதற்கு எங்களை (சீனா) பாதிக்கவே இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டார். நான் சொன்னேன் 'இல்லை, இந்தோ-பசிபிக் பகுதியில் ஒன்றாக இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளவர்களையே நாங்கள் ஒன்றிணைக்க முயல்கிறோம் என்று அவரிடம் விளக்கினேன்,

இந்தியா
எதேச்சதிகாரிகள் அதிகம் அஞ்சும் விஷயங்களில் ஒன்று முக்கியமானது பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைவது. அதாவது அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். எனக்குத் தெரியும், இந்தியாவிற்கும் அதன் சொந்த பிரச்சனைகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிற்கும் அவற்றின் சொந்த பிரச்சனைகள் உள்ளன. ஆனால், சர்வாதிகார நாடுகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். சீனா மட்டுமல்ல, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் என பல நாடுகள் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றன.

புதின் திட்டம்
நான் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட போது, நேட்டோ அமைப்பை எளிதாக உடைத்துவிடலாம் என்று புதின் கருதினார். நேட்டோ அமைப்பை உடைப்பது என்பது தொடக்கம் முதலே அவரது முக்கிய திட்டமாக உள்ளது. இதைத்தான் நான் எட்டு ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். ஆனால், இது மட்டும் அவரது திட்டம் இல்லை. இது அவரது திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. ஆனால், இதில் நகைமுரண் என்னவென்றால், அவர் எது நடக்கக்கூடாது என்று நினைத்தாரோ அதுவே தான் நடந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள்
ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் நடுநிலை நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என அவர் நினைத்தார். ஆனால், நடுநிலையாக இருந்த பின்லாந்து கூட இப்போது நேட்டோ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஸ்வீடன் நாடு கூட நேட்டோவில் சேர வேண்டும் என விரும்புகிறது. அவர் விரும்பியதற்கு நேர்மாறான முடிவுகளே அவருக்குக் கிடைக்கிறது. ஆனால், இதற்காக நாம் விரும்பிய அனைத்தும் நடந்துவிட்டது என்று நான் கூற வில்லை.

நேர்மாறான முடிவுகள்
உக்ரைன் போரில் அந்நாட்டு மக்கள் நம்பமுடியாத அளவிற்குத் தைரியத்துடன் போராடி வருகின்றனர். அந்நாட்டு ராணுவம் மட்டுமின்றி, சாதாரண பொதுமக்களும் கூட வீதிகளில் இறங்கி போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். இந்த போரில் ரஷ்ய ராணுவம் வென்று வருவதாக ரஷ்யாவில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், உண்மையில் அதற்கு நேர்மாறான விஷயங்களே அங்கு நடக்கிறது" என்றார்,












Click it and Unblock the Notifications