பிராமணர்கள் லாபத்திற்காக.. ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குகிறது.. டிரம்ப் ஆலோசகர் பகீர் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, ரஷ்யா-உக்ரைன் போரின் மூலம் இந்தியா ஆதாயம் அடைவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்ய எண்ணெயை மலிவு விலையில் வாங்கி, சுத்திகரித்து, அதை ஐரோப்பா மற்றும் பிற நாடுகளில் அதிக விலைக்கு விற்பதன் மூலம் இந்தியா லாபம் ஈட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸ் உடனான ஒரு நேர்காணலில், ரஷ்யாவிற்கு இந்தியா ஒரு சலவை மையம் போல செயல்படுகிறது என்று வெள்ளை மாளிகை ஆலோசகர் குறிப்பிட்டார்.

Donald Trump India

இந்தியா பிராமணர்கள் லாபம்

உக்ரைன் மீதான முழு அளவிலான தாக்குதலுக்கு முன்னர் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கவில்லை. ஆனால் இப்போது வாங்குகிறார்கள். இந்தியா வாங்கும் இந்த எரிபொருள்தான் ரஷ்ய போர் செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தியா ரஷ்யாவிற்கு ஒரு சலவை இயந்திரம் போல செயல்படுகிறது. ரஷ்யா எண்ணெயை விற்கும் கூடாரம் போல இந்தியா செயல்படுகிறது. இந்திய மக்கள் தங்கள் சொந்த காசை கொடுத்த ரஷ்ய போருக்கு உதவுகிறார்கள். இதை எல்லாம் செய்ய வைத்து பிராமணர்கள் இலாபம் ஈட்டுகிறார்கள். ரஷ்யாவின் எண்ணெயை இந்தியாவின் தலையில் கட்டி பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள். இதை நாம் நிறுத்த வேண்டும்," என்று நவரோ கூறினார்.

இந்திய சுத்திகரிப்பாளர்கள் தள்ளுபடி விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி, அதைச் சுத்திகரித்து, அதிக விலைக்கு ஏற்றுமதி செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். ரஷ்யா எண்ணெய் விற்று லாபம் சம்பாதிக்கும் இந்த உக்ரைனியர்களைக் கொல்கிறது. இந்தியர்களும் இதனால் பலன் எல்லாம் அடையவில்லை. தள்ளுபடி விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி அதை இந்திய மக்களுக்கு விற்காமல் அதிக விலைக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

மோடி ஒரு சிறந்த தலைவர்... அவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற போதிலும், புடின் மற்றும் ஜி ஜின்பிங்குடன் ஏன் உறவு கொள்கிறார் என்று எனக்குப் புரியவில்லை, என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவிற்கு ஆதரவாக சீனாவும், ரஷ்யாவும் களமிறங்கி உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்து உள்ள நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக சீனா, ரஷ்யா களமிறங்கி உள்ளது.

இந்தியாவிற்கும் - சீனாவிற்கும் நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது அமெரிக்க வரி சர்வாதிகார விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக சீனா களமிறங்கி உள்ளது. அதேபோல் இன்னொரு கம்யூனிஸ்ட் நாடான இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடான ரஷ்யாவும் இந்தியாவிற்கு உறுதுணையாக இருக்கிறது.

இந்தியா மீது கூடுதல் வரி

டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.

இந்தியாவிற்கு ஆதரவாக வரும் ரஷ்ய அதிபர்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் வியாழக்கிழமை அன்று மாஸ்கோவில் தெரிவித்தார். இந்தச் சந்திப்பிற்கான தேதிகள் இன்னும் குறிப்பிடப்படவில்லை. எனினும், இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் இந்தச் சந்திப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிகழக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

அதிபர் புடின் இந்தியாவிற்கு வருவது குறித்த மகிழ்ச்சியைத் தெரிவித்த தோவல், "எங்களுக்கு இடையே ஒரு சிறப்பான, நீண்டகால உறவு உள்ளது. இந்த உறவை நாங்கள் மதிக்கிறோம். உயர்மட்ட அளவிலான ஈடுபாடுகள் பெரிய அளவில் பங்களித்துள்ளன. அதிபர் புடின் இந்தியாவிற்கு வரும் செய்தி கேட்டு நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். தேதிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாக நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

புடினின் இந்திய வருகை குறித்து மாஸ்கோ இதுவரை அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. ஆனால் இந்த அறிவிப்பு, ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் காரணமாக டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் வந்துள்ளது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தகம் சோவியத் யூனியன் காலத்திலிருந்தே நீண்டகால உறவைக் கொண்டுள்ளது. இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இருதரப்பு வர்த்தகத்தில் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளன. கடந்த நான்கு வருட போரின் தொடக்கத்திலிருந்து, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. 2023 மே மாதத்தில், இந்தியா ஒரு நாளைக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் கச்சா எண்ணெயை வாங்கியது, இது அதன் மொத்த இறக்குமதியில் சுமார் 45% ஆகும்.

அதிபர் புதின் வருகை, இந்தியாவின் புவிசார் அரசியல் உத்தியில் ஒரு முக்கிய தருணமாக அமையலாம். டிரம்ப்பின் வர்த்தக வரி மிரட்டல்களுடன் இந்த வருகை சரியாகப் பொருந்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+