மணிக்கு 27,000 கி.மீ வேகத்தில் பூமிக்குள் நுழையும் சுபான்ஷு சுக்லா! எப்போது தரையிறங்குகிறார்?
வாஷிங்டன்: இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா கடந்த மாதம் இறுதியில் விண்வெளிக்குச் சென்றார். இரண்டு வாரங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கிய சுபான்ஷு சுக்லா அங்குப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். இதற்கிடையே இன்றைய தினம் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மீண்டும் பூமி திரும்புகிறார். இதற்கான பயணம் தற்போது தொடங்கியுள்ளது.
இஸ்ரோ அமைப்பானது விண்வெளி துறையில் தொடர்ச்சியாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில் மிகவும் வெற்றிகரமான விண்வெளி ஆய்வு நிறுவனமாக இஸ்ரோ இருந்து வருகிறது. குறைந்த செலவில் மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் விண்வெளி ஆய்வுகளை இஸ்ரோ செய்து வருகிறது. அதற்குச் சந்திரயான் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

சுபான்ஷு சுக்லா
இதற்கிடையே அடுத்த கட்டமாக இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது. ககன்யான் என்ற இந்தத் திட்டத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இதற்காக 4 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியும் பெற்று வருகிறார்கள். அப்படித் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவர் சுபான்ஷு சுக்லா.
ககன்யான் திட்டத்திற்கு முன்பாகவே நாசா உதவியுடன் சுபான்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன் மூலம் அவருக்குக் கிடைக்கும் அனுபவம் ககன்யான் திட்டத்திற்கு உதவும் என்பதால் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பயிற்சி, நாசாவுக்கான கட்டணம் என இஸ்ரோ இதற்குச் சுமார் ரூ.500 கோடி வரை செலவிட்டுள்ளது.
தீவிரப் பயிற்சி
இதற்காக சுக்லா கடந்த சில மாதங்களாகவே தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டார். பயிற்சி எல்லாம் முடிந்த பிறகு கடந்த கடந்த மாதம் ஜூன் 25ம் தேதி விண்வெளிப் பயணத்தைத் தொடங்கிய சுபான்ஷு சுக்லா 24 மணி நேரம் பயணித்து மறுநாள் அதாவது ஜூன் 26ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றார். கடந்த இரு இரண்டு வாரங்களாக விண்வெளி நிலையத்தில் இருந்த அவர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.
பூமி திரும்புகிறார்
இந்தியரான ரகேஷ் சர்மாவுக்கு பிறகு விண்வெளி சென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை சுபான்ஷு சுக்லா பெற்றார். மேலும், சர்வதேச சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார். இரு வார ஆய்வுகள் முடிந்த நிலையில், சுபான்ஷு சுக்லா இன்று மீண்டும் பூமி திரும்புகிறார்.
எப்போது திரும்புகிறார்
இன்று மாலை சுபான்ஷு சுக்லா 3 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டிருக்கிறார். இன்று மாலை 4.30 மணியளவுக்கு அவர்கள் விண்வெளி நிலையத்தில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கியுள்ளார்கள். சுமார் 23 மணி நேரம் பயணத்திற்குப் பிறகு நாளை மாலை 3 மணியளவில் அவர்களின் விண்கலம் பூமியை அடையும்.
அமெரிக்காவின் கலிபோர்னியா கடலில் அவர்களின் விண்கலன் தரையிறங்கும். அந்த விண்கலன் தரையிறங்கிய உடனே அவர்களை மீட்கவும் குழு தயாராக இருக்கிறது. சுமார் இரு வாரங்கள் அவர்கள் விண்வெளியில் இருந்துவிட்டு திரும்புவதால் அவர்களின் உடலில் சில பல மாற்றங்கள் நடந்திருக்கும். இதனால் சில நாட்கள் வரை அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications