"தவறானது.. தேவையில்லாதது.." சிஏஏ பற்றி அமெரிக்கா சொன்ன அந்த வார்த்தை.. பொங்கி எழுந்த இந்தியா
வாஷிங்டன்: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அமெரிக்கா சில கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், அதற்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றி இருக்கிறது.
நமது நாட்டில் சமீபத்தில் தான் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இருப்பினும், இதை மத்திய அரசு மறுத்துள்ளது.

இந்தச் சூழலில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த அமெரிக்கா சில கருத்துகளைக் கூறியிருந்தது. இதற்கிடையே அமெரிக்காவின் இந்த கருத்திற்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றி இருக்கிறது. இது இந்தியாவின் உள் விவகாரம் என்றும் அதில் அமெரிக்கா தலையிடத் தேவையில்லை என்றும் காட்டமான கருத்துகளை இந்தியா கூறியுள்ளது.
இந்தியா பதிலடி: இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் பன்மைத்துவ மரபுகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் எங்களுக்குப் பாடம் எடுக்க முயலாமல் இருப்பது நல்லது. இந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்கள் அனைவருக்கும் மத சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இங்குள்ள சிறுபான்மையினருக்கு எந்தவொரு பாகுபாடும் இல்லை.
கஷ்டத்தில் இருப்போருக்கு உதவக் கொண்டு வந்த சட்டத்தை வாக்கு வங்கி அரசியல் என்ற நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது.. இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு ஆகியவை குறித்துச் சரியான புரிதல் இல்லாதவர்கள் தேவையில்லாமல் பேசாமல் இருப்பதே நல்லது. இந்தியாவின் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நோக்கத்தை வரவேற்கத் தான் வேண்டும்,
அமெரிக்கா: அமெரிக்காவின் கருத்துக்கள் தவறானவை, மற்றும் தேவையற்றவை. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்விவகாரம்.. மனித உரிமைகளுக்கான நீண்டகால அர்ப்பணிப்பையே இது காட்டுகிறது. இந்து, சீக்கியர், பௌத்தர், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது. டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவிற்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த சமூகங்கள் குடியுரிமை பெற இது உதவும்.
சிஏஏ என்பது குடியுரிமை வழங்குவது தொடர்பான சட்டம் தானே தவிர.. குடியுரிமையைப் பறிப்பது இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது.ய சிஏஏ அமலாக்கம் குறித்த அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியிருக்கும் கருத்துகள் தவறானவை மற்றும் தேவையற்றது என்று நாங்கள் கருதுகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா சொல்வது என்ன: முன்னதாக அமெரிக்கா இது தொடர்பாகத் தனது கருத்துகளைத் தெரிவித்து இருந்தது. அதாவது சிஏஏ குறித்த அறிவிப்பு கவலை தருவதாகவும் சர்ச்சைக்குரிய சட்டத்தைச் செயல்படுத்துவதை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா கூறியது. மேலும், மத சுதந்திரத்திற்கான மரியாதை தரப்பட வேண்டும் என்றும் அனைத்து சமூகங்களுக்கும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் என்றும் அமெரிக்கா கூறியிருந்தது.
இந்த சிஏஏ சட்டம் மூலம் 2014 டிசம்பர் 31க்கு முன் இந்தியா வந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த ஆவணமற்ற முஸ்லீம் அல்லாத அகதிகள் குடியுரிமை பெற முடியும் கடந்த 2019ஆம் ஆண்டிலேயே மத்திய அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்ட போதிலும் கடந்த மார்ச் 11ஆம் தேதி தான் இந்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications