இந்திய மீதான அமெரிக்காவின் வரி 10% ஆக குறைந்தது.. நீதிமன்ற தீர்ப்பால் வழிக்கு வந்த டிரம்ப்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த பரஸ்பர வரி செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. வரியை விதிக்க அதிபருக்கு அதிகாரம் கிடையாது என்று தெளிவுப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் உலக நாடுகள் மீது 10% கூடுதல் வரியை டிரம்ப் விதித்திருக்கிறார். இந்தியா மீதும் வரி விதிக்கப்பட்டிருப்பதால் நமக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது.

வரி மேட்டர் எல்லாம் நாடாளுமன்றம் பார்க்க வேண்டிய விஷயம். இதில் அதிபருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. இந்த உத்தரவை சற்றும் எதிர்பார்க்காத டிரம்ப், உலக நாடுகள் மீது 10% கூடுதல் வரியை போட்டிருக்கிறார்.

India US Trade Impact

இது இந்தியாவை கடுமையாக பாதிக்கும் என்று சொல்லப்பட்டது. அதாவது, ஏற்கெனவே இந்தியா மீது 18% வரி இருக்கிறது. கூடுதலாக 10% எனில், மொத்தம் 28% வரி இந்தியா தலையில் விழும். இது இந்தியாவுக்கு சிக்கல்தான் என்று சொல்லப்பட்டது.

ஆனால், அமெரிக்க உச்சநீதிமன்றம் 18% வரியை செல்லாது என்று சொல்லிவிட்டதால் தற்போது டிரம்ப் விதித்திருக்கும் 10% வரி மட்டும் வசூலிக்கப்படும். இந்த வரியும் 150 நாட்களுக்குதான் செல்லுபடி அகும். அதன் பிறகும் வரி தொடர வேண்டும் எனில், அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுக்க வேண்டும். அப்படி பார்த்தால் இந்த 10% வரியும் கூட குறைய வாய்ப்பு இருக்கிறது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க நீதிமன்றம் சொன்னது என்ன?

டிரம்ப் பரஸ்பர வரியை விதிக்க 1977ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'அவசரக்கால பொருளாதார அதிகாரம்' சட்டத்தை பயன்படுத்தியிருந்தார். ஆனால், இந்த சட்டம் வர்த்தகத்தை ஒழுங்குப்படுத்த மட்டும்தான் கொண்டுவரப்பட்டது. அதிலும் குறிப்பாக, வரியை விதிக்க அதிபருக்கு இந்த சட்டம் அதிகாரத்தை கொடுக்கவில்லை. இதைத்தான் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள், வரி விதிக்கும் அதிகாரத்தை நிர்வாக தரப்பினரிடம் கொடுக்கவில்லை. அதாவது அதிபரோ, துணை அதிபரோ நேரடியாக வரியை போட முடியாது. மாறாக, நாடாளுமன்றம்தான் வரியை விதிக்க முடியும் என நீதிபதிகள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+