சென்னை வரும் கமலா ஹாரிஸ்? அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றிக்கு முன்பே போன டிமாண்ட்! என்ன நடந்தது?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் தேர்தலில் வென்று அமெரிக்க அதிபரான உடன் தாய் ஷியாமளாவின் சொந்த ஊரான சென்னைக்கு கமலா ஹாரிஸ் செல்ல வலியுறுத்துவேன் என்று அவருக்காக தேர்தல் நிதி சேகரித்து வரும் இந்திய வம்சாவளியான சேகர் நரசிம்மன் தெரிவித்துள்ளார். மேலும் அதன் பின்னணி சுவாரசியம் பற்றியும் அவர் விவரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக போட்டியிட ஆர்வம் காட்டிய நிலையில் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து பின்வாங்கி உள்ளார்.

இதையடுத்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் VS ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ் என மாறி உள்ளது.
இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக தேர்தல் நிதிகள் திரட்டப்பட்டு வருகிறது. பல்வேறு அமைப்பினர் இந்தி நிதி திரட்டலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கமலா ஹாரிசுக்காக நிதி சேகரித்து வருபவர்களில் ஒருவர் சேகர் நரசிம்மன். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர். இவரது தாயின் சொந்த ஊர் சென்னையாகும். சேகர் நரசிம்மன் அமெரிக்கா பசிபிப் தீவு பகுதி மக்களின் வெற்றி நிதியத்தின் தலைவரான சேகர் நரசிம்மன் செயல்பட்டு வரும் நிலையில் கமலா ஹாரிசுக்காக நிதி சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் தான் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் அவரது தாய் ஷியாமளா கோபாலன் வசித்த சென்னைக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக சேகர் நரசிம்மன் கூறுகையில், ‛‛ அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் இந்தியா செல்ல வேண்டும் என்று வலியுறுத்துவேன். குறிப்பாக சென்னை செல்ல வேண்டும் என்று கூறுவேன். டெல்லி என்பது எனக்கு நெருக்கமான பகுதி. ஆனால் கட்டாயம் சென்னை செல்ல வேண்டும் என்று கூறுவேன். சென்னை செல்ல கமலா ஹாரிஸை கட்டாயப்படுத்துவதன் பின்னணியில் ஒன்று மட்டுமே உள்ளது.
இதனை எழுத்து வடிவில் கூறியுள்ளேன். அது என்னவென்றால் எனது தாய்க்கும், அவரது தாய்க்கும் சொந்த ஊர் சென்னை என்பதை தெரிவித்துள்ளேன். உண்மையில் அவர் தேர்தலில் ஜெயிப்பார். ஜெயித்து அமெரிக்க அதிபராக நாங்கள் சென்னை வருவோம். கமலா ஹாரிஸ் நிச்சயம் வருவார். அவருக்கு நல்ல உற்சாகமாகன வரவேற்பு கிடைக்கும். சிறப்பான வரவேற்பை பில் கிளிண்டன் பெற முடியும் பட்சத்தில் உண்மையில் இந்திய தாய் மண்ணின் மகளான கமலா ஹாரிஸை ஏன் இந்தியர்கள் வரவேற்க மாட்டீர்கள்? நிச்சயம் அவரை வரவேற்பதில் உற்சாகம் இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.
சென்னை என்பது கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலனின் சொந்த ஊராகும். ஷியாமளா தனது மேற்படிப்புக்காக 16 வயதிலேயே அமெரிக்கா சென்றார். கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும் கூட அவருக்கும் சென்னைக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. சிறுவயதில் கமலா ஹாரிஸ் அடிக்கடி சென்னை வந்து சென்றுள்ளார். 2009ம் ஆண்டு கமலா ஹாரிஸ் தனது தாயின் அஸ்தியை எடுத்து வந்து இந்திய பெருங்கடலில் கரைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கமலா ஹாரிசும் சென்னையில் தனது தாத்தா கோபாலனுடன் நேரம் செலவிட்டதை பல பேட்டிகளில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications