அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்.. டிரம்புக்கு போட்டியாக இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி.. யார் இவர்?
கேரளாவை பூர்வீகமாக கொண்ட விவேக் ராமசாமி, அமெரிக்காவில் மிகப்பெரிய மருந்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். பெரும் கோடீஸ்வரரான இவர், அமெரிக்க தேசியவாதத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவர் ஆவார்.
வாஷிங்டன்: அதிபர் தேர்தலுக்கு அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி, அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பே போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட சமயத்தில், அக்கட்சியில் இருந்தே அவருக்கு எதிராக பலரும் உருவாகி வருவது டிரம்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் தேர்தலில் போட்டியிட தற்போது தயாராகி வரும் விவேக் ராமசாமி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலை எதிர்நோக்கும் அமெரிக்கா
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றுள்ளார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ளதால், இப்போதே அதிபர் தேர்தல் ஜுரம் அமெரிக்காவில் பரவத் தொடங்கிவிட்டது.

பகல் கனவு கண்ட டிரம்ப்
2024 அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடனே போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல, குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுபடியும் களம் காண்பார் என்றே சில தினங்களுக்கு முன்பு வரை கூறப்பட்டு வந்தது. குடியரசுக் கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து வேட்பாளர் போட்டியில் நின்றுவிடக் கூடாது என்பதில் டிரம்ப்பும் கவனமாக இருந்தார். இதற்காக, குடியரசுக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரிடம் பேசி தனக்கு ஆதரவை திரட்டி வந்தார் டிரம்ப்.

களமிறங்கும் இந்திய வம்சாவளியினர்
இந்நிலையில், டிரம்ப்பை எதிர்த்து அவரது கட்சியில் இருந்தே பல நிர்வாகிகள் தற்போது அதிபர் வேட்பாளராக வரத் தொடங்கியுள்ளனர். அதன்படி, நேற்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தெற்கு காரோலினா ஆளுநராக இருந்தவருமான நிக்கி ஹேலி அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். டிரம்ப் ஆட்சிக்காலத்தில் ஐநாவுக்கான அமெரிக்க தூதராகவும் செயல்பட்டிருக்கிறார் நிக்கி ஹேலி. அரசியல் அனுபவம் நிறைந்திருப்பதால் நிக்கி ஹேலிக்கு குடியரசுக் கட்சியில் கணிசமான ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

விவேக் ராமசாமி
இந்த சூழலில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரான விவேக் ராமசாமியும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக விரைவில் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட விவேக் ராமசாமி, அமெரிக்காவில் மிகப்பெரிய மருந்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். பெரும் கோடீஸ்வரரான இவர், அமெரிக்க தேசியவாதத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவர் ஆவார். இவருக்கும் குடியரசுக் கட்சியில் நல்ல செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இருவரை தவிர மேலும் சிலரும் குடியரசுக் கட்சியில் இருந்து அதிபர் தேர்தலுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால் டிரம்புக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications