சென்னை ஐஐடி மாணவர் அமெரிக்காவில் மாயம்.. 6 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு.. திக்திக் சம்பவம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை ஐஐடியில் படித்த மாணவர் சுமார் 6 நாட்களுக்கு முன்பு மாயமாகி இருந்த நிலையில், அவரது சடலம் இப்போது மீட்கப்பட்டுள்ளது. அவருக்கு என்ன நடந்தது.. உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது தொடர்பாக உள்ளூர் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கு மேற்படிப்பிற்காகச் செல்கிறார்கள். பெரும்பாலும் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாகவே இருப்பார்கள். இருப்பினும், அதையும் தாண்டி ஓரிரு முறை மிக மோசமான சம்பவங்கள் நடந்துவிடும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

இந்திய மாணவர்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மாயமான 22 வயது இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் மாயமாகி சுமார் 6 நாட்கள் ஆன நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் மற்றும் பயோ மாலிக்குலார் இன்ஜினியரிங்கில் முதுகலைப் பட்டப்படிப்பு மேற்கொண்டிருந்தார். இந்தச் சூழலில் தான் கடந்த பிப்ரவரி 9ம் தேதி இவர் திடீரெனக் காணாமல் போனார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்தச் சூழலில் தான் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரகம்
இதை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது. உள்ளூர் போலீசார் அவரது உடலைக் கண்டுபிடித்ததாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.. மேலும், அவரது உடலை இந்தியாவுக்கு விரைந்து கொண்டுவரத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்துள்ளது.
இது குறித்து இந்தியத் தூதரகம் மேலும், "இந்த மிகவும் கடுமையான சோதனையான நேரத்தில், அவரது குடும்பத்திற்கும் அன்புக்குரியவர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது உடலை விரைந்து இந்தியாவுக்கு எடுத்து வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். அவரது குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது!
சகேத் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடைசியாகக் காணப்பட்டார். அவர் காணாமல் போன தகவலையடுத்து, லேக் அன்சா மற்றும் பெர்க்லி ஹில்ஸ் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டது. அப்போது அவரது பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் இருந்த பை, டில்டன் பிராந்திய பூங்காவின் அருகே உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
சகேத்தை கண்டுபிடிக்கச் சமூக வலைத்தளங்களிலும் உதவிகள் வந்தன. ரெடிட் தளத்திலும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.. இந்தச் சூழலில் தான் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்
சகோத் சென்னை ஐஐடியில் தனது இளங்கலை படிப்பை முடித்திருக்கிறார். அவர் தனது பள்ளிப்படிப்பை பெங்களூரில் உள்ள ஸ்ரீ வாணி கல்வி மையத்தில் முடித்தவர். கல்லூரியில் மிகச் சிறந்த மாணவராகவே இருந்துள்ளார். அது மட்டுமின்றி, "ஹைப்பர்லூப்பிற்கான மைக்ரோசேனல் கூலிங் சிஸ்டம் மற்றும் அதற்கான முறை" என்ற கண்டுபிடிப்புக்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார். கூர்மையான புத்திசாலித்தனம், பணிவைக் கொண்டவராக இவர் அறியப்படுகிறார்.
முன்னதாக வெளிநாடுகளில் படிக்க செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மஜ்லீஸ் கட்சியின் எம்பி அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகம், "இந்தியத் தூதரகங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது. எதாவது சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்படுகிறது. தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்! -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications