எலான் மஸ்க்கின் அமெரிக்கா கட்சியின் பொருளாளராக இந்திய வம்சாளி தனேஜா நியமனம்! யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அரசியலில் உள்ள இரு கட்சி முறையை உடைக்கும் வகையில் 'அமெரிக்கா கட்சி' என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். மேலும் தனது கட்சியின் பொருளாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த வைபவம் தனேஜா என்பவரை எலான் மஸ்க் நியமனம் செய்துள்ளார். அமெரிக்க கட்சியில் மிக முக்கிய பொறுப்பினை வகிக்கும் இந்திய வம்சாவளி வைபவம் தனேஜா யார் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் அண்மையில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவி புதிய கட்சி தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்று எலான் மஸ்க் கூறியிருந்தார். இதற்கு டொனால்டு டிரம்ப் கொண்டு வந்த பிக் பியூட்டிபுல் மசோதாவே காரணம்.

indian-origin-tesla-cfo-vaibhav-taneja-named-america-party-treasurer-in-major-elon-musk-announcement

இந்திய வம்சாவளிக்கு பொறுப்பு

இந்த மசோதாவில் இடம் பெற்று இருந்த அம்சங்களை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனால், இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் முற்றியது. இத்தகைய பரபரப்புக்கு இடையேதான் டிரம்ப் கொண்டு வந்த மசோதா அமெரிக்காவின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இதையடுத்து உடனடியாக புதிய கட்சியை தொடங்குவதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

அமெரிக்க அரசியலில் உள்ள இரு கட்சி முறையை உடைக்கும் வகையில் 'அமெரிக்கா கட்சி' என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். தனது கட்சியின் பொருளாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த வைபவம் தனேஜா என்பவரை எலான் மஸ்க் நியமனம் செய்துள்ளார். தனது அமெரிக்க கட்சியில் மிக முக்கிய பொறுப்பினை இந்திய வம்சாவளி நபருக்கு எலான் மஸ்க் வழங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

யார் இந்த வைபவ் தனேஜா?

அமெரிக்காவின் பெடரல் தேர்தல் ஆணையத்திடம் எலான் மஸ்க் தனது கட்சியின் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். அந்த ஆவணங்களில் இந்த விவரம் நடைபெற்றுள்ளது. எலான் மஸ்க்கின் அமெரிக்கா கட்சியின் தலைமையகம் 1 ராக்கர் சாலை, ஹாவ்தோர்னில் அமைந்துள்ளது. வைபவ் தனேஜா ஆவணங்களின் காப்பாளராகவும், பொருளாளராகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

வைபவ் தனேஜா டெஸ்லாவின் தலைமை நிதி அதிகாரியாக ஆகஸ்ட் 2023 இல் பொறுப்பேற்றார். சாக் கிர்கோர்ன் வெளியேறியதைத் தொடர்ந்து இவர் அந்த பதவிக்கு வந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான தனேஜா, பல ஆண்டுகளாக டெஸ்லாவின் கணக்கியல் மற்றும் நிதி நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவர் 2017 இல் சோலார்சிட்டியை டெஸ்லா வாங்கியபோது டெஸ்லாவில் சேர்ந்தார்.

டெஸ்லாவுக்கு வருவதற்கு முன்பு

அதற்கு முன்பு, தனேஜா மூத்த நிதிப் பொறுப்பில் இருந்தார். டெஸ்லாவுக்கு வருவதற்கு முன்பு, தனேஜா கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் (PwC) நிறுவனத்தில் பணியாற்றினார். தனேஜா டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றுள்ளார். மேலும், பட்ட பட்டய கணக்காளராகவும் உள்ளார்.

வைபவ் தனேஜாவை, தனது கட்சியின் பொருளாளாராக எலான் மஸ்க் நியமனம் செய்து இருப்பது அமெரிக்கர்கள் இடையே விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எலான் மஸ்க்கின் அமெரிக்கா கட்சியை H-1B கட்சி என்று விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதற்கு அனுமதிக்கும் H-1B திட்டத்தின் ஆதரவாளராக எலான் மஸ்க் இருந்து வருகிறார்.

சுந்தர் பிச்சையோடு அதிக சம்பளம்

எனவே, அவரது கட்சியின் முக்கிய பொறுப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம் செய்யப்பட்டு இருப்பது அமெரிக்காவில் சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டும் வருகிறது. டெஸ்லாவின் நிதி அதிகாரியாக இருக்கும் தனேஜா, 2024 இல் மொத்தம் $139 மில்லியன் ஊதியமாகப் பெற்று இருந்தார்.

இது கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சி இ ஓ,சத்யநாதெல்லா வாங்கும் சம்பளத்தை விட அதிகம் ஆகும். எனவே, கடந்த ஆண்டே தனேஜா செய்திகளில் அதிகம் அடிபட தொடங்கியிருந்தார். தனேஜாவுடன் ஒப்பிடுகையில், சுந்தர் பிச்சை $10.73 மில்லியன் மற்றும் சத்யா நாடெல்லா $79.1 மில்லியன் சம்பளம் பெற்று இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+