வெறும் 1.30 மணி நேரம்தான்.. வெனிசுலா அதிபரை தூக்கியது எப்படி? அமெரிக்க படைத் தளபதி கொடுத்த விளக்கம்!
வாஷிங்டன்: ஆபரேஷன் 'அப்சல்யூட் ரிசால்வ்' மூலம், வெனிசுலாவுக்குள் புகுந்து, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க ராணுவம் கடத்தியுள்ளது. இதை எப்படி செய்தார்கள் என்று அமெரிக்க கூட்டுப் படைத் தளபதி ஜெனரல் டான் கெய்ன் விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "இப்பணியில் 150க்கும் மேற்பட்ட போர், குண்டுவீச்சு, கண்காணிப்பு, உளவு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. F-35, F/A-18, E/A-18, F-22 போர் விமானங்கள், B-1 குண்டுவீச்சு விமானங்கள், ஆளில்லா விமானங்கள், E-2 ஹாக்ஐஸ் ரக விமானங்களும் இதில் அடங்கும். தரைப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை, விண்வெளிப் படை, உளவுத்துறை முகமைகளும் இந்த ஆபரேஷனில் பங்கேற்றன.

இந்த தாக்குதல் ஒரு குறிப்பிட இடத்திலிருந்து தொடங்கப்படவில்லை. மாறாக நிலம், கடல் என 20 வெவ்வேறு பகுதிகளிலிருந்து ஆபரேஷனுக்காக விமானங்கள் புறப்பட்டன. ஆதரவு விமானங்களும் துணை நின்றன. டிரம்ப் ஜன.2ம் தேதி இரவு 10:46 மணிக்கு இத்திட்டத்துக்கு உத்தரவிட்டார். "நல்வாழ்த்துக்களுடன் கடவுளின் ஆசீர்வாதமும் உங்களுக்கு துணை புரியட்டும்" என்ற அவரது செய்தி, படை வீரர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
மதுரோ மற்றும் மனைவியைப் பிடிக்கும் சிறப்புப் படையில் சட்ட அமலாக்கப் பிரிவினர் இருந்தனர். ஹெலிகாப்டர்கள் வெனிசுலாவை நெருங்கும்போது, நீர்நிலைக்கு மேல் 100 அடி உயரத்தில் தாழப் பறந்தன. மதுரோவின் வளாகத்திற்குப் பாதுகாப்பாகச் செல்ல, வான் பாதுகாப்பு அமைப்புகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. ஹெலிகாப்டர்கள் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:01 மணிக்கு வளாகத்தை அடைந்தன. தாக்குதலுக்கு உள்ளானதும், படைகள் தற்காப்புக்காக அபாரமான சக்தியுடன் பதிலடி கொடுத்தன. ஒரு ஹெலிகாப்டர் தாக்கப்பட்டபோதும் தொடர்ந்து செயல்பட்டது.
அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன், நீதித் துறை அதிகாரிகளால் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர். இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை. ஹெலிகாப்டர்கள் வெளியேறும்போது, போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் பாதுகாப்பளித்துத் தாக்குதல் நடத்தின.
அதிகாலை 2:01 மணிக்கு தொடங்கி ஆபரேஷன், 3:39 மணிக்கு முடிந்தது. மதுரோவை கடத்திய ஹெலிகாப்டர் கடல் பகுதிக்குள் நுழைந்தது. மதுரோவும் அவரது மனைவியும் யு.எஸ்.எஸ். இவோ ஜிமா கப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிகஸ், நிரபராதிகள் உயிரிழந்ததாகக் கூறினார். ஆனால் ஆதாரங்களை இல்லை.
இத்திட்டம் நுணுக்கமாகத் பல மாதத் திட்டமிடப்பட்டு ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது. தவறு நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவே நாங்கள் தொடர்ந்து பயிற்சி செய்கிறோம், ஒத்திகை பார்க்கிறோம். எந்த எதிரிக்கும் எதிராக, சரியான நேரத்தில், சரியான இடத்தில், அபாரமான சக்தியை வழங்கவே, எங்கள் கூட்டுப் படை தயார்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவம், சிஐஏ, என்ஜிஏ, என்எஸ்ஏ போன்ற உளவுத்துறை முகமைகளுடன் நெருக்கமாகச் செயல்பட்டது. நாங்கள் கவனித்தோம், தயாரானோம், பொறுமையுடனும் நிபுணத்துவத்துடனும் செயல்பட்டோம். மதுரோவின் தினசரி நடமாட்டம், வாழ்விடம், பயணங்கள் குறித்த தகவல்கள் அமெரிக்க உளவுத்துறைக்குத் தெரிந்திருந்தது.
சர்ப்ரைஸ் தாக்குதலை அதிகமாக்குவதற்காக, இத்திட்டம் டிசம்பர் மாதத் தொடக்கத்திலேயே தயாராக இருந்தது. சரியான நாளுக்காகக் காத்திருந்து, முழுமையான உளவுத் தகவலின் அடிப்படையிலேயே அதிபர் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது" என தெரிவித்துள்ளார்.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications