வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ.. டிரம்பின் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா முடக்கம்
வாஷிங்டன்: வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதாக டொனால்ட் டிரம்பின் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதை தொடர்ந்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கப்பட்டது.
Recommended Video

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தூண்டுதலின் பேரில் கேபிட்டல் கட்டடத்தில் வன்முறை நிகழ்ந்தது. இந்த வன்முறையை கட்டுக்குள் வைத்திருக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் பலியானார். மேலும் 3 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகிவிட்டனர்.

ஜோ பிடன் திருடிய வெற்றி
சுமார் 6 மணி நேரமாக இந்த கட்டடத்திற்கு வன்முறை நிகழ்ந்தது. அப்போது அந்த வன்முறைக்கு மீண்டும் எரியூட்டுவது போல் டிரம்ப் ட்விட்டரில் ஒரு வீடியோ போட்டிருந்தார். அதில் அவர் உங்கள் வலி எனக்கு தெரியும். அதிபர் தேர்தலால் நீங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். நமது வெற்றியை ஜோ பிடன் திருடி விட்டார்.

காயப்படுத்தக் கூடாது
எனினும் இப்போது நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள். அமைதி நிலவ வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். நம் மக்களுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். யாரையும் நாம் காயப்படுத்தக் கூடாது என பதிவிட்டிருந்தார்.

வைரல்
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக இந்த வீடியோவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. மேலும் விதிகளை மீறியதாக டிரம்பின் ட்விட்டர் பக்கமும் தாற்காலிகமாக 12 மணி நேரத்திற்கு முடக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து வன்முறை தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் அவரது ட்விட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ட்விட்டர்
அது போல் பேஸ்புக் நிறுவனம் கூறுகையில் அதிபர் டிரம்பின் பேஸ்புக் பக்கத்திற்கு எதிராக இரு கொள்கை மீறல்களை எங்கள் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. அவர் 24 மணி நேரத்திற்கு எந்த பதிவையும் வெளியிட முடியாது என தெரிவித்துள்ளது. பின்னர் அவரது பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது டிரம்பின் இன்ஸ்டாகிராம் பக்கமும் முடங்கியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications