ஈரான் வெளியிட்ட கண்டிஷன் எல்லாம் டம்மி.. நாங்க வச்சிருக்க பிளானே வேற.. பரபரப்பை கிளப்பும் அமெரிக்கா
வாஷிங்டன்: ஈரான் வெளியிட்ட 10 அம்ச திட்டங்கள் என்று ஊடகங்களில் வெளியாகும் ஆவணமும் நாங்கள் போர் நிறுத்த்திற்கு சம்மதம் தெரிவித்து ஏற்றுக்கொண்ட செயல்பாட்டு வடிவமைப்பும் ஒரே மாதிரியானவை அல்ல என்று அமெரிக்கா அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை நடைமுறைக்கு மதிப்பளிக்கும் வகையில் அது பற்றி பொதுவெளியில் பேச மாட்டோம் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி கூறியுள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 28 ஆம் தேதி போர் வெடித்தது. ஈரான் அணு ஆயுத தயாரிப்பு முயற்சியில் ஈடுபடுவதாக கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இறுதி கெடு விதித்த டிரம்ப்
இதையடுத்து, ஈரானும் கடும் கோபத்துடன் வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்க தொடங்கியது. ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியது. இதனால், சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் வளைகுடா நாடுகளிலும் நெருக்கடி அதிகரித்தது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளும் திவீர முயற்சியில் ஈடுபட்டன.
ஆனால் உடனடியாக எந்த பலனும் கிடைக்கவில்லை. ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நீடித்து வந்த நிலையில், ஈரானுக்கு டிரம்ப் இறுதி கெடு விதித்தார். நாங்கள் முன்வைத்த 15 அம்ச திட்டத்தை ஏற்றுக்கொண்டு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இல்லையென்றால் ஈரானை இருந்த இடம் தெரியாமல் அழித்துவிடுவேன் என்று எச்சரித்தார்.
தற்காலிக போர் நிறுத்தம்
அதாவது, ஈரான் பேரழிவை சந்திக்கும் எனவும் அந்த நாட்டின் மின்கட்டமைப்புகள், பாலங்கள் இரவோடு இரவாக தகர்த்து எறியப்படும் எனவும் நரகத்தின் வாயில் ஈரானுக்கு திறக்க வேண்டும் என கடுமையாக எச்சரித்தார். ஹார்முஸ் ஜலசந்தியையும் உடனே திறக்க வேண்டும் என்று கெடு விதித்து இருந்தார். டிரம்ப் விதித்த கெடு முடிவடைய சில மணி நேரமே இருந்த நிலையில், பாகிஸ்தான் மத்தியஸ்தில் அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
வெள்ளை மாளிகை அதிகாரி விளக்கம்
போர் நிறுத்தம் செய்ய 10 நிபந்தனகைளையும் ஈரான் விதித்து இருந்தது. ஈராக், லெபனான், ஏமன் மீதான போரை முழுவதுமாக நிறுத்த வேண்டும். ஈரான் மீதான தாக்குதலை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து நெறிமுறைகளை நிறுவ வேண்டும்.
ஈரானை மறு கட்டமைப்பதற்கான செலவு தொகையை வழங்க வேண்டும். ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட 10 நிபந்தனைகள் அந்த பட்டியலில் இடம் பெற்று இருந்தன. போர் நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களில் ஈரான் வெளியிட்ட நிபந்தனைகள் தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
போர் நிறுத்தம் நீடிக்குமா?
அதாவது, ஈரானால் வெளியிட்ட 10 அம்ச திட்டமும் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வதற்காக ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளும் ஒன்று அல்ல. ஊடகங்களில் பரவி வரும் ஆவணமும் நாங்கள் செயல்படுத்தி வரும் வரைவு பணித்திட்டமும் ஒன்று அல்ல என்று பெயர் வெளியிட விரும்பாத வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக மேற்கொண்டு பேச மறுத்த அவர், அந்த நடைமுறையின் மதிப்பு கருதி அதை பொதுவெளியில் பேசப்போவது இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் கடும் கோபம் அடைந்துள்ள ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவும் இப்படி மாற்றி மாற்றி பேசி வருவது போர் நிறுத்தம் நீடிக்குமா? என்ற சந்தேகத்தை கிளப்புவதாக அமைந்துள்ளது.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications