அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்.. விமானியை உயிருடன் பிடித்து கொடுப்பவருக்கு பரிசு அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்க போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய நிலையில், அதில் சென்ற ஒரு விமானியின் கதி என்ன என்று தெரியவில்லை. அமெரிக்க போர் விமானியை உயிருடன் பிடித்தால் பரிசு தரப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்காவும் விமானியை முழு வீச்சில் தேடி வருகிறது.
ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் இரண்டாவது மாதத்தை எட்டியுள்ளது. போரை முடிவுக்கு கொண்டுவர ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடப்பதாக அமெரிக்க கூறிவந்தாலும் இன்னொரு பக்கம் இருநாடுகளும் கடுமையாக மோதி வருகின்றன.

சுட்டு வீழ்த்திய ஈரான்
ஈரான் மீது அடுத்த இரண்டு வாரங்களுக்கு கடுமையான தாக்குதல் நடத்துவோம் அந்த நாட்டை கற்காலத்திற்கே திருப்பி அனுப்புவோம் என்று சூளுரைத்த டிரம்ப், தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறார். அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான், அமெரிக்காவிற்கு சொந்தமான இரண்டு போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது.
விமானியின் கதி என்ன?
அமெரிக்காவின் அதி நவீன போர் விமானமான எப் -15 இ என்ற ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டது. இரண்டு பேர் பயணிக்க கூடிய இந்த ஜெட் போர் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதில் இருந்த ஒரு விமானியை அமெரிக்கா மீட்டுள்ளது. இன்னொரு வீரர் இன்னும் மீட்கப்படவில்லை என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேபோல, ஏ 10 போர் விமானம் குவைத்தில் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில் இருந்து விமானி வெளியே குதித்தார். இதற்கிடையே, அமெரிக்க போர் விமானத்தில் இருந்து மாயமாகியுள்ள ஒரு விமானியை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்த அமெரிக்காவின் இரண்டு ஹெலிகாப்டர் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும், இந்த ஹெலிகாப்டர்கள் ஈரான் வான்பரப்பை தாண்டி வந்துவிட்டது.
பரிசு அறிவித்த ஈரான்
அமெரிக்க போர் விமானத்தில் இருந்து குதித்த விமானியை உயிருடன் பிடித்து கொடுத்தால் பரிசு தரப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. தென்மேற்கு ஈரானில் விமானம் விழுந்த இடத்திற்கு அருகிலுள்ள பகுதியை சல்லடை போட்டுத் தேடி வருவதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹம்மத் பகேர் கலிபாஃப் கூறுகையில், "அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய போர் ஆட்சிமாற்றம் செய்யும் நோக்கிலிருந்து, அவர்களின் விமானிகளை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது" என்று அமெரிக்காவை விமர்சித்தார்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications