ஈரானின் கதை முடிந்தது... 3 வார போரை முடிக்கப்போகிறோம்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: ஈரான் மீதான போரில் அமெரிக்கா தனது இலக்குகளை நெருங்கிவிட்டதாகவும், ஈரானுக்கு எதிராக மத்திய கிழக்கில் ராணுவ இருப்பை குறைத்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் திடீரென்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்மூலம் 3 வாரங்களாக நடக்கும் ஈரான் போரை முடிக்கும் முடிவுக்கு டொனால்ட் டிரம்ப் வந்துள்ளார்.

டிரம்ப் போட்ட பதிவு
இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''மத்திய கிழக்கில் ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக சிறப்பாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த ராணுவ நடவடிக்கையின் பயனாக எங்களின் இலக்குகளை எட்ட அதன் அருகே சென்றுவிட்டோம். இதனால் ராணுவ நடவடிக்கைகளை குறைத்து கொள்ள பரிசீலனை செய்து வருகிறோம்.
ஈரானுக்கு ஏற்பட்ட இழப்பு
1. ஈரானின் ஏவுகணை திறன் மற்றும் லாஞ்சர்களை அழித்துள்ளோம். 2. ஈரானின் பாதுகாப்பு துறை தளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. 3. கடற்பனை, விமானப்படை உள்பட விமான ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளது. 4. ஈரானை ஒருபோதும் அணுசக்தி திட்டத்தை நோக்கி செல்ல விடமாட்டோம். மீறி ஈரான் அணுசக்தி திட்டத்தை கையில் எடுத்தால் அதற்கு எதிராக விரைவாக அமெரிக்கா செயல்படும்.
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்
5. மத்திய கிழக்கில் எங்களின் நட்பு நாடுகளாக உள்ள இஸ்ரேல், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீர்கம், பஹ்ரைன், குதை் உள்பட பிற நாடுகளை உயர்மட்ட அளவில் பாதுகாத்து வருகிறோம். ஹார்முஸ் ஜலசந்தி விஷயத்தில் அதனை பயன்படுத்தும் நாடுகள் தேவையானபாதுகாப்பு நடவடிக்கைகள், கொள்கைகளை வகுத்து கொள்ள வேண்டும்.
அதனை அமெரிக்கா செய்யாது. பிற நாடுகள் கேட்டுக்கொண்டால் அமெரிக்கா உதவும். ஆனால் ஈரானின் மிரட்டல் அழிக்கப்படும் பட்சத்தில் இது தேவைப்படாது. முக்கியமாக இந்த முக்கிய கப்பல் வழித்தடத்தை பாதுகாப்பது அந்த நாடுகளுக்கு (பயன்படுத்தும் நாடுகள்) எளிய ராணுவ நடவடிக்கையாக இருக்கும்'' என்றார்.
போரை நிறுத்த முடிவு?
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா சாதித்தது என்ன? என்பது என்ற பதிவால் டிரம்ப் போரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
-
வாட்சை தொலைத்த மேக்ரான்! டிரம்புக்கு கிடைத்த டுகாட்டி பைக்! G7 மாநாட்டில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
இஸ்ரேல் தேரை இழுத்து தெருவில் விட்டது.. லெபனான் மீது 84 முறை தாக்குதல்.. ஈரான் உச்சக்கட்ட கோபம்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்!












Click it and Unblock the Notifications