ஈரான் போரால்.. X வலைதளத்தில் குவியும் மக்கள்.. புது ரெக்கார்ட் படைத்த எலான் மஸ்க்.. ஏன்? பின்னணி
வாஷிங்டன்: இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடுமையாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் வரலாற்றில் இல்லாத வகையில் எக்ஸ் வலைதளத்தை ஒரே நாளில் அதிகளவில் மக்கள் பயன்படுத்தி உள்ளனர். கடந்த 2024ம் ஆண்டில் இருந்த சாதனையை முறியடித்து தற்போது புது ரெக்கார்ட் படைக்கப்பட்டுள்ளது.

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக எலான் மஸ்க் உள்ளார். இவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றி மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கி உள்ளார். உலகம் முழுவதும் பொதுமக்கள் அதிகளவில் எக்ஸ் வலைதள பக்கத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் எக்ஸ் வலைதள பக்கம் புதிய ரெக்கார்ட்டை படைத்துள்ளது. அதாவது ட்விட்டர் மற்றும் எக்ஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிகமான மக்கள் எக்ஸ் வலைதள பக்கத்தை பயன்படுத்தி உள்ளனர்.
கடந்த 2024 ஜூலை 15ம் தேதி 417 பில்லியன் குளோபல் யூசர் செக்ன்ட்ஸ் என்ற அளவுக்கு எக்ஸ் வலைதளம் ஆக்டிவ்வாக இருந்துள்ளது. ஒரு பில்லியன் என்பது 100 கோடி அப்படியென்றால் 417 பில்லியன் என்பது 41,700 கோடி குளோபல் யூசர் செகன்ட்ஸாகும். இதுதான் ஒருநாளி்ல் எக்ஸ் பக்கத்தை பொதுமக்கள் பயன்படுத்தியதிலேயே அதிகமாக இருந்தது.
தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எவ்வளவு பேர் எக்ஸ் வலைதளத்தை பயன்படுத்தினர்? எவ்வளவு போஸ்ட்டுகள் போடப்பட்டன? என்ற இதுதொடர்பாக எக்ஸ் வலைதள பக்கத்தின் உரிமையாளராக உள்ள டெஸ்லா சிஇஓவான எலான் மஸ்க், ‛‛இதுவரை இல்லாத மிக உயர்ந்த பயன்பாட்டை பெற்றுள்ளது'' என கூறியுள்ளார். அமெரிக்கா-இஸ்ரேல் என இருநாடுகளும் சேர்ந்து ஈரான் மீது போர் புரிந்து வருகின்றன. நேற்று காலை முதல் இருநாடுகளும் தீவிரமாக ஈரானை தாக்கி வருகின்றன ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டுள்ளார்.
இவர் இறந்த செய்தியை நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தினார். அதன்பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்தார். இதையடுத்து இன்று காலையில் ஈரான் அதிகாரப்பூர்வமாக அயதுல்லா அலி காமேனி இறந்ததை அறிவித்தது. இததான் எக்ஸ் வலைதள பக்கத்தை அதிகமானவர்கள் பயன்படுத்தியதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள், ஈரானில் ஏற்பட்ட சேதம், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஜோர்டான், சவூதி அரேபியா மற்றும் ஈராக் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்கியது குறித்த அப்டேட்டுகளை பெற பலரும் எக்ஸ் வலைதளத்தை பயன்படுத்தினர். இதுதான் இந்த புதிய ரெக்கார்ட்டுக்கு முக்கிய காரணமாகும்.
மேலும் இன்னும் போர் முடியவில்லை. 2வது நாளாக இன்றும் போர் நடந்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சொந்தமான இடங்களை ஈரான் குறிவைத்து இதுவரை இல்லாத அளவுக்கு தாக்குதல் நடத்துவதாக எச்சரித்துள்ளது.
இதனால் டென்ஷனாகி உள்ள டிரம்ப், ‛‛ ஈரான் பதிலடி கொடுக்க வேண்டாம். மீறினால் விளைவுகள் மோசமாக இருக்கும். இதுவரை இல்லாத வகையில் பெரும் படையுடன் தாக்குதல் நடத்தப்படும்'' என வார்னிங் செய்துள்ளார். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications