ஈரானுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்தும் சூழல் வராது.. திடீரென பல்டியடித்த டிரம்ப்.. பின்னணி
வாஷிங்டன்: ஈரானை சுற்றி அமெரிக்கா போர்க்கப்பல்கள், போர் விமானங்களை குவித்துள்ளன. இந்நிலையில் தான் வெனிசுலாவில் நிகழ்ந்தது போன்று, ஈரான் ஆட்சியையும் மாற்றும் நோக்கில், அதன்உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியை குறிவைத்து தூக்க டிரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இதனால ்கொந்தளித்த ஈரான், அமெரிக்காவுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று வார்னிங் செய்தது. இதையடுத்து தற்போது டொனால்ட் டிரம்ப் திடீரென்று பல்டியடித்துள்ளார்.
ஈரானில் தற்போது உள்நாட்டு குழப்பம் நிலவி வருகிறது. பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. அமெரிக்காவும், ஈரானும் பகையாளியாக உள்ளன. இதனால் தற்போது மோதல் வலுக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தான் தற்போது ஈரானுக்கு புதிய மிரட்டலை டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ளார். இது இருநாடுகள் இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டு ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் டிரம்ப்
அதன்பிறகு அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். ஆனால் ஈரான் மறுத்து வருகிறது. பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் தான் உடனடியாக அணுஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று டிரம்ப் ஈரானை மிரட்டி உள்ளார்.
டிரம்ப் மிரட்டல்
இதுபற்றி டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தில் கூறியுள்ளதாவது: ‛‛நேரம் போய் கொண்டிருக்கிறது. இதனால் ஈரான் விரைவில் பேச்சுவார்த்தை முன்வந்து அனைவருக்கும் நன்மை ஏற்படும் வகையில் நியாயமான மற்றும் சமமான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன். ஈரான் அணுஆயுதம் வைத்திருக்க கூடாது. நேரம் விரைவாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் ஒரு பிரமாண்டமான கடற்படை ஈரான் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
வெனிசுலா அதிபர் போல் கைது?
வெனிசுலாவின் நிகோலஸ் மதுரோவை கைது செய்ய அனுப்பிய கடற்படையை விட தற்போது ஈரானை நோக்கி சென்றுள்ள கடற்படை மிகவும் பெரியது. அதோடு தயார் நிலையில் உள்ளது. ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படாத பட்சத்தில் அதன் அணுசக்தி தளங்கள் மீது கடந்த 2025 ஜூன் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலை விட மிக மோசமான தாக்குதலுக்கு உள்ளாகலாம்'' என்று கூறியுள்ளார்.
சுரங்கத்துக்குள் கமேனி
இந்நிலையில் தான் வெனிசுலா பாணியில் ஈரானுக்குள் நுழைந்து அந்த நாட்டின் உச்சபட்ச தலைவரான அயதுல்லா அலி கமேனியை டிரம்ப் கைது செய்ய உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது ஈரானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கத்தில் பதுங்கி உள்ளார்.
இந்த சுரங்கம் அதீத பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. மேலும் சுரங்கத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் விரைவாக தப்பிக்கும் வகையில் பல சுரங்கப்பாதைகளை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரான் கொந்தளிப்பு - வார்னிங்
டிரம்பின் மிரட்டலால் கொந்தளித்த ஈரான், அமெரிக்காவுக்கு உரிய முறையில் பதிலடி கொடுப்போம். பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருக்கிறோம் என்று அறிவித்தது. ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ரமினியா, ‛‛அமெரிக்காவின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் ஈரான் கடும் பதிலடி கொடுக்கும். அது வரம்பற்றதாக இருக்கும். அமெரிக்க போர் கப்பல்களிலும் பலவீனங்கள் உள்ளது. எங்களின் ஏவுகணைகள் அதனை தாக்கும்'' னெ்று வார்னிங் செய்தார்.
டிரம்ப் திடீர் ‛பல்டி’
இது அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றத்தை அதிகரித்தது. இந்த பதற்றத்துக்கு நடுவே தான் டொனால்ட் டிரம்ப் திடீரென்று பல்டியடித்துள்ளார். ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இருக்காது என்று கூறியுள்ளார். இதுபற்றி டொனால்ட் டிரம்ப், ‛‛ஈரானுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். தொடர்ந்தும் பேச இருக்கிறேன். போர் கப்பல்களுடன் கடற்படை பிரிவு ஒன்று ஈரான் நோக்கி புறப்பட்டுள்ளது. அதை நாங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று நம்புகிறோம்" என்றார்.
கமேனியை தூக்க முடியுமா?
இதனால் அயதுல்லா அலி கமேனியை தூக்கும் முயற்சியை அமெரிக்கா கைவிட்டுள்ளதாக ஈரான் நம்புகிறது. மேலும் வெனிசுலாவை ஒப்பிடும்போது ஈரானில் படைகள் வலிமையானது. இது டிரம்புக்கு பெரும் சவாலானதாக இருக்கும்.
இருப்பினும் அதையெல்லாம் கடந்து ஒருவேளை அதையும் தாண்டி அமெரிக்கா ஈரானுக்குள் நுழைந்து அவரை தூக்கினால் அது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுதான் டிரம்பின் பல்டிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
போர் விமானங்கள் - போர்க்கப்பல்கள் குவிப்பு
இருப்பினும் கூட டஅமெரிக்கா ஈரானை சுற்றி வளைத்துள்ளது. தற்போது அமெரிக்கா தனது நாசக்கார கப்பல்களில் ஒன்றான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கும் போர்க்கப்பலை ஈரானை நோக்கி அனுப்பி வைத்துள்ளது.
அதுமட்டுமின்றி மத்திய கிழக்கில் ஏற்கெனவே அமெரிக்கா தனது படைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியின்படி மத்திய கிழக்கில் பல நாடுகளில் 30,000 முதல் 40,000 அமெரிக்க படை வீரர்கள் உள்ளனர். 5 விமானப் பிரிவுகள் மற்றும் ஐந்து போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் கூடுதல் வான்-பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன.
யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கித் கப்பல் F-18 ரக போர் விமானங்கள், ரேடாரில் சிக்காமல் தாக்குதல் நடத்தும் F-35 ரக விமானங்கள், மின்ன மற்றும் மின்னணுப் போருக்காக வடிவமைக்கப்பட்ட EA-18 Growlers ரக விமானங்களையும் குவித்துள்ளது.
மேலும் மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது விமானப்படை தளம் உள்ளிட்டவை பாதுகாக்க வான்வெளி பாதுகாப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை பகிரங்கமாக மிரட்டி உள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.
-
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
ஈரான் தினமும் 1310 கோடி சம்பாதிக்கிறது.. ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது தெரியுமா? -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம்












Click it and Unblock the Notifications