F**King.. நெதன்யாகுவை கெட்டவார்த்தை சொல்லி திட்டிய டிரம்ப்.. ஏன் தெரியுமா? வெளியான தகவல்
வாஷிங்டன்: கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் தான் இஸ்ரேல் பிரதமரும், தனது நெருங்கிய நண்பருமான பெஞ்சமின் நெதன்யாகுவை F**K என்ற கெட்டவார்த்தை சொல்லி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் தனது விமானப்படை விமானங்கள் மூலமாக கத்தார் தலைநகர் தோஹாவில் சில நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பை சேர்ந்த கலில் அல் ஹயா மற்றும் அவரது கூட்டாளிகளை இஸ்ரேல் குறிவைத்தது. இதில் கலில் அல் ஹயா தப்பினார். அவரது மகன் ஹமாம் அல் ஹயா, அவரது அலுவலக இயக்குநராக செயல்பட்டு வந்த ஜிகாத் லுபத், 3 பாதுகாவலர்கள், ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரி உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் எப்படி அமெரிக்காவுக்கு நட்பு நாடோ, அதேபோல் தான் கத்தாரும் அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ளது. இது டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தியது. கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலை அவர் தடுக்க தவறிவிட்டதாக கத்தார் அதிருப்தியடைந்தது. ஆனால் அமெரிக்காவோ எங்களுக்கு தெரியாமல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு விட்டதாக கத்தாரை சமாளித்தது.
இந்நிலையில் தான் தற்போது பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கத்தார் மீதான தாக்குதலால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை டிரம்ப் கெட்டவார்த்தை பேசி திட்டி உள்ளார். அதாவது கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலால் தனக்கு பிரச்சனை வரும் என்பது டிரம்புக்கு தெரியும். இதனால் அதனை எப்படி சமாளிப்பது என்று டொனால்ட் டிரம்ப் விவாதித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உள்பட அவரது சகாக்களுடன் டிரம்ப் இதுபற்றி விவாதித்தார். அப்போது டிரம்ப், காட்டமான வார்த்தைகளை பயன்படுத்தி நெதன்யாகுவை விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக The Wall Street Journal பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக He is F**king me என்று நெதன்யாகுவை அவர் திட்டி உள்ளார். கத்தாரும், அமெரிக்காவும் நல்ல நட்பில் உள்ளன. அமெரிக்கா தங்களுக்கு பாதுகாப்பு தரும் என்று கத்தார் நம்பி வருகிறது. கத்தாரில் அமெரிக்காவின் விமானப்படை தளம் உள்ளது. அல் உதெய்த் தத் விமானதளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கியமான விமானதளம் இதுவாக உள்ளது. இப்படியான சூழலில் டிரம்புக்கு நெருக்கமான இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கத்தாரை தாக்கி இருப்பதை பொறுத்து கொள்ளாமல் அவர் இப்படி கூறியுள்ளார்.
டிரம்ப் தற்போது தன்னை உலகளாவிய அமைதிக்கான தலைவராக நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளார். டிரம்பிடம் நட்பாக இருந்து கொண்டு நெதன்யாகுவின் இந்த தாக்குதலை நடத்தியதை அவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அதுமட்டுமின்றி மத்திய கிழக்கில் இஸ்ரேல் தொடர்ந்து தனது தாக்குதலை அதிகரித்து செல்வதை டிரம்ப் விரும்பவில்லை.
காசாவில் போரை நிறுத்த கத்தார் மூலமாக தான் ஹமாஸிடம் டிரம்ப் பேசி வருகிறார். அதோடு மத்திய கிழக்கில் அமைதியை கொண்டு வர டிரம்ப் காய்நகர்த்தி வருகிறார். இதற்கிடையே தான் காசா மீதான தாக்குதலை அதிகப்படுத்துவது மட்டுமின்றி ஈரான், லெபனான், சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இப்போது கத்தாரை குறிவைத்து தாக்கி இருப்பதால் டிரம்ப் கோபமாகி இந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டொனால்ட் டிரம்ப், நெதன்யாகுவை இப்படியான வார்த்தை சொல்லி திட்டுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் போர் நடந்தது. 11 நாள் போர் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு இஸ்ரேல் இனி ஈரானை தாக்காது என்று டிரம்ப் கூறியிருந்தார். அவர் கூறியதற்கு பிறகும், இஸ்ரேலின் ஏவுகணைகள் ஈரானை பதம் பார்த்தது. இதனால் கோபமான டிரம்ப், அந்த கெட்டவார்த்தையை டிவியின் லைவில் கூறியிருந்தார்.
அதேபோல் கத்தார் மீதான தாக்குதலுக்கு பிறகு டிரம்ப், நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். முன்கூட்டியே தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் தாக்குதல் நடத்தியதால் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதி செய்திருந்த நிலையில் நெதன்யாகுவை கெட்டவார்த்தை சொல்லி அவர் திட்டி உள்ளார்.
அதேவேளையில் இன்னொரு தரப்பினரோ, டிரம்ப் இப்படி நெதன்யாகுவை திட்டுவது போல் பாவனை தான் செய்கிறார். இது வெறும் நாடகம். உண்மையில் டிரம்பும், நெதன்யாகுவும் சேர்ந்து தான் கத்தார் மீதான தாக்குதலை நடத்தி உள்ளனர் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் செப்டம்பர் 11ம் தேதி காலையிலேய டிரம்புக்கு, கத்தார் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications