போரால் நடந்த பெரும் துயரம்! ஈரானில் பள்ளி மீது இஸ்ரேல், அமெரிக்கா குண்டு மழை.. 80 சிறுமிகள் பேர் பலி!
வாஷிங்டன்: ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தெற்கு ஈரானில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அந்த பள்ளியில் படித்து வந்த 80 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
ஈரான் தொடர்ந்து அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, உடனடியாக அணு ஆயுத தயாரிப்பை கைவிடுமாறும், ஒப்பந்த போடுமாறும் அழைப்பு விடுத்து வந்தது. 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் ஈரானை சுற்றி போர்க்கப்பல், போர் விமானங்களை நிலைநிறுத்தி மிரட்டல் விடுத்து வந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இந்த நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை தொடர்ந்தது. ஈரான் மீது ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் தாக்கியது. நட்பு நாடு என்பதால் அமெரிக்காவும் இஸ்ரேலுடன் இணைந்து தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரானில் தலைநகரான தெஹ்ரான் மற்றும் கமேனி வீடு, அலுவலகம், தெற்கு ஈரான் என 30 இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களில் இருந்தும் ஏவுகணைகளை அமெரிக்கா அனுப்பியது. இதில் தெற்கு ஈரானில் உள்ள மகளிர் பள்ளி ஒன்றின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏவுகணை வெடித்து சிதறியதில் பள்ளி கட்டிடம் சுக்குநூராகியது. இதில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 80-க்கும் அதிகமான சிறுமிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் பதிலுக்கு ஈரானும் தாக்கத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க படைத் தளங்கள் மீது குறிவைத்து ஈரானும் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சவுதி அரேபியா, ஈராக், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளிளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ முகாம், கடற்படைமுகாம், விமான தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் வான் பரப்புகள் மூடப்பட்டுள்ளன. இஸ்ரேல் ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. யுஏஇ, சவுதி, கத்தார், ஓமன் மற்றும் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக் ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று துருக்கி ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ், ஏர் பிரான்ஸ், நார்வே, லுஃப்தான்ஸா, ஜப்பான் ஏர்லைன் நிறுவனங்களும் விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. மேலும் அங்கு வசிக்கும் இந்தியர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications