குழந்தை இல்லாத கமலா ஹாரிஸ் நாட்டை ஆள வேண்டுமா? டிரம்ப் தரப்பு பகீர்.. வெடித்த ஹாலிவுட் பிரபலம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி.வான்ஸின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில் அவர் குழந்தை இல்லாத பெண்கள் ஆட்சி செய்யக்கூடாது என்று கமலா ஹாரிஸை கடுமையாகத் தாக்கி பேசுகிறார். இதற்கிடையே இதற்கு ஹாலிவுட் பிரபலம் ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், இதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடும் நிலையில், அவர் தனது துணை அதிபர் வேட்பாளராக ஜே.டி.வான்ஸை தேர்வு செய்திருக்கிறார்.

இதற்கிடையே குடியரசு துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி.வான்ஸின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.அந்த வீடியோவில் குழந்தை இல்லாத பெண்கள் ஆட்சி செய்யத் தகுதியற்றவர்கள் என்று வான்ஸ் கூறுவது போல இருக்கிறது.
அநாகரிக பேச்சு: கடந்த 2021இல் வான்ஸ் அளித்த இந்த நேர்காணலில் கமலா ஹாரிஸ் பற்றிப் பேசும் போதே இதுபோல கூறியிருந்தார். அதாவது வான்ஸ் அந்த வீடியோவிஸ் “தங்கள் சொந்த வாழ்க்கையில் மோசமான தேர்வுகளால் பரிதாபமான நிலையில் இருக்கும் குழந்தை இல்லாத பெண்கள் அமெரிக்காவை வழிநடத்தினால் அமெரிக்காவும் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும்.
நான் சொல்வது அடிப்படை உண்மை. நீங்கள் ஜனநாயக கட்சியைப் பாருங்கள்.. கமலா ஹாரிஸ், பீட் புட்டிகீக் என்று குழந்தைகள் இல்லாதவர்களே அக்கட்சியைக் கட்டுப்படுத்துகிறார்கள். இந்த நாடு வரும் காலத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்க அவர்களுக்குக் காரணமே இல்லை. அப்படி இருக்கும் நபர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்” என்று அவர் பேசியிருப்பார்.
கமலா ஹாரிஸ்: கமலா ஹாரிஸின் கணவர் டக் எம்ஹாஃப்.. இந்த தம்பதிக்குக் குழந்தை இல்லை. இருப்பினும் டக் எம்ஹாஃப் மற்றும் அவரது முதல் மனைவி கெர்ஸ்டின் உடன் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கமலா ஹாரிஸ் உடனேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் பிரபலம்: அவரது இந்த பழைய வீடியோ இப்போது இணையத்தில் பரவி வருகிறது. இது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. நெட்டிசன்கள் பலரும், குறிப்பாகப் பெண்கள் அவருக்கு எதிராக மிகக் கடுமையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே பிரபல ஹாலிவுட் நடிகையான ஜெனிஃபர் அனிஸ்டன் இது குறித்து காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் துணை அதிபர் ரேஸில் இருக்கும் ஒருவர் இதுபோன்ற கேவலமான கருத்துகளைக் கூறியிருக்கிறார் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு.. அமெரிக்க அரசியலை மாற்றி எழுத முயலும் கமலா ஹாரிஸ்! யார் இவர்
ஜெனிஃபர் அனிஸ்டன்: இது தொடர்பாக ஜெனிஃபர் அனிஸ்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். வான்ஸ், உங்கள் மகளுக்குக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அவர் குழந்தை பெற்றுக் கொள்ளச் சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தேவைப்படாது என நம்புகிறேன்” என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கமலா ஹாரிஸுக்கு குழந்தை இல்லாததை எதிர்க்கட்சியான குடியரசு கட்சி ஒரு விஷயமாக எடுத்து விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் தலைவர்கள், பெண்ணியவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பிரபலங்கள் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications