கடைசி நிமிடங்களில் சொன்னது இதுதான்! திருமணத்தை மீறிய உறவில் சிக்கி.. பதவியை இழந்த என்விடியா CEO!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: திருமணத்தை மீறிய உறவில் சிக்கி, என்விடியா சிஇஓ பதவியை ஜென்சன் ஹுவாங் இழந்திருக்கிறார். அவர் பதவியை விட்டு விலகுவதற்கு முன்பு கடைசி நிமிடங்களில் பேசிய விஷயங்கள் கவனம் பெற்றிருக்கின்றன.

மொத்த உலகமும் தற்போது AI -க்கு மாறியிருக்கிறது. இந்த AIக்கு தேவையான சிப்புகளை தயாரிப்பதில் என்விடியாதான் டாப்பில் இருக்கிறது. அப்பேர்ப்பட்ட நிறுவனத்தின் சிஇஓவாக இருந்தவர்தான் ஜென்சன் ஹுவாங்.

Jensen Huang

எல்லாம் நல்லாதான் போய்க்கொண்டிருந்தது! திருமணத்தை மீறிய உறவில் இவர் இருக்கிறார் என்கிற விஷயம் வெளியில் தெரியாதவரை. ஆலிஸ் ஹுவாங் என்கிற சீன பெண்ணுடன் இவர், திருமணத்தை மீறிய உறவில் இருந்தது முதலில் தெரிய வந்தது. ஆலிஸ், சிங்கப்பூரை சேர்ந்த 'மெகாஸ்பீட்' எனப்படும் AI நிறுவனத்தின் மிக முக்கியமான அதிகாரியாக இருக்கிறார். இது வெளியில் தெரிந்த விஷயம். தெரியாத விஷயம்.. இவர் சீன உளவாளி என்பதுதான். அமெரிக்கா இப்படித்தான் சொல்கிறது. ஆனால் சீனாவும், சிங்கப்பூரும் இதை மறுத்துள்ளன.

ஆலிஸ் மட்டுமல்ல, என்விடியா நிறுவனத்தில் பணியாற்றும் மற்றொரு மூத்த பெண் அதிகாரியுடனும் ஜென்சன், கடலை போட்டு வந்திருக்கிறார். இது இல்லாமல் 3வதாக இன்னொரு பெண்ணுக்கும் ரூட் விட்டிருக்கிறார். இதெல்லாம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஜென்சன் இந்த விஷயங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து என்விடியா நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பிலிருந்து அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.

அவர் ராஜினாமா செய்வதற்கு முன்னர், அவரது மனநிலை எப்படி இருந்தது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு சின்ன, சின்ன விஷயத்தையும் கூட கவனமாக அணுகும் ஜென்சன், திருமணத்தை மீறிய உறவு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும்.. மொத்தமாக உடைந்து போனதாக சொல்லப்படுகிறது. எப்போதுமே உற்சாக மனநிலையில் இருந்த இவர், இந்த விஷத்தால் 'எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு கவலை இல்லை' என்கிற மனநிலைக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இத்தனைக்கும் இவரை சிஇஓ பதவியில் தக்க வைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூட விருப்பப்பட்டார். தனிப்பட்ட முறையில் செல்போனில் கூப்பிட்டு, நீங்கள் சிஇஓ பதவிக்காக தொடர்ந்து போராடுங்கள். எல்லா சப்போர்டும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று டிரம்ப் சொன்னதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன. இவ்வளவு பெரிய சப்போர்ட் இருந்தும் கூட.. ஜென்சன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, என்விடியா பங்குகள் மளமளவென சரிய தொடங்கியிருக்கின்றன. அக்.6ம் தேதி உட்சபட்ச விலையில் இருந்த இதன் பங்குகள் தற்போது வரை 30.5% வரை சரிந்துள்ளது.

இந்த பஞ்சாயத்து வெறும் என்விடியா நிறுவனத்துடன் நிற்கவில்லை. அமெரிக்க அரசாங்கத்திற்குள்ளேயும் புயலை கிளப்பியிருக்கிறது. சீனா விஷயத்தில் அசால்ட்டாக இருந்ததாக அந்நாட்டின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன.

எது எப்படியோ.. திருமணத்தை மீறிய உறவு என்னைக்கு இருந்தாலும் ரொம்பவே டேன்சர் என்பதை ஜென்சனின் வாழ்க்கை உணர்த்தியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+