கார் சேல்ஸ்மேன் மகன்.. குடும்பத்துடன் சொந்த ஊரை காலி செய்த கொடுமை.. ஜோ பிடன் பற்றி அறியப்படாத கதை..!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிமுகத்தில் உள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மிக எளிய குடும்ப பின்னணியை கொண்டவர்.
சாதாரண கார் சேல்ஸ் மேன் மகனாக பிறந்து தனக்கிருந்த அரசியல் திறமையால் படிப்படியாக வளர்ந்து இன்று அகில உலகமும் தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
ஜோ பிடனை பொறுத்தவரை அரசியலில் வெற்றி தோல்விகளை மாறி மாறி சுவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார் விற்பனையாளர்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ரஸ்ட் பெல்ட் என்ற சிறிய நகரத்தில் 1942-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதியன்று பிறந்தார் ஜோசப் ராபினெட் பிடன். பெற்றோர் சூட்டிய இந்தப் பெயரை ஜோ பிடன் என தனது அரசியல் பிரவேசத்திற்கு பிறகு மாற்றிக்கொண்டார் இவர். தந்தை கார் ஷோரூம் ஒன்றில் சேல்ஸ் மேனாக பணியாற்றியதால் நடுத்தர வர்க்க குடித்தனம் நடத்தியது ஜோ பிடனின் குடும்பம்.

வேலையிழப்பு
1950-களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஜோ பிடனின் தந்தைக்கு வேலை பறிபோனது. சொந்த ஊரில் பிழைப்பு நடத்த இனியும் வழியில்லை என்பதால் ரஸ்ட் பெல்ட் நகரில் இருந்து டெலாவேருக்கு குடிபெயர்ந்தது ஜோ பிடனின் குடும்பம். 10 வயது வரை சொந்த ஊரில் ஓடி ஆடி விளையாடிய நண்பர்களை விட்டுவிட்டு டெலாவேருக்கு செல்ல ஜோ பிடனுக்கு மனமில்லை. இருப்பினும் குடும்ப சூழலை உணர்ந்து தனது நினைவுகளை சுமந்தப்படி டெலாவேருக்கு சென்றார் ஜோ பிடன்.

வாழ்க்கைப் பாடம்
டெலாவேரில் கருப்பின மக்களின் பாதுகாவலராக தனது இமேஜை உயர்த்திக் கொண்ட ஜோ பிடன் இளம் பிராயத்திலேயே அரசியல் மீது ஆர்வம் கொள்ளத் தொடங்கினார். மகனின் அரசியல் ஆசைக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஜோ பிடனின் தந்தை, அவரை அவரது விருப்பப்படி சிராகியூஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்க வைத்தார். அதன் பின்னர் இனவெறிக்கு எதிராக ஓங்கி ஒலித்து முழங்கத் தொடங்கிய ஜோ பிடன் குரல் இன்று வரை ஒலித்துக்கொண்டிருக்கிறது.

முதல் மனைவி கொலை
ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துகொண்டிருந்த ஜோ பிடனுக்கு 1972-ம் ஆண்டு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு ஒன்று நடந்தது. கிறிஸ்துமஸ் ஷாப்பிங் சென்றிருந்த ஜோ பிடனின் மனைவி நெலியா மற்றும் மகள் நவோமி கார் விபத்தில் பலியாகினர். இரண்டு மகன்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். முதலில் விபத்தாக கருதப்பட்ட நிலையில் அது எதிரிகளால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொலை என்பது ஜோ பிடனுக்கு பின்னர் தெரிய வந்தது.

பிடன் 2-வது திருமணம்
முதல் மனைவி இறந்த நிலையில் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்த ஜோ பிடன் 1975-ம் ஆண்டு ஆசிரியை ஜில் என்பவரை சந்திக்கிறார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட காதல் இரண்டாண்டு நீடிக்கிறது. பிறகு 1977-ம் ஆண்டு அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். முதல் மனைவிக்கு பிறந்த ஹண்டர் மற்றும் பியூ என்ற இரு மகன்களும் ஜில்லை தனது சிற்றன்னையாக ஏற்றுக்கொண்டனர்.

பெண் குழந்தை
ஜோ பிடனுக்கும் -ஜில் ஜாக்கபுக்கும் 1981-ம் ஆண்டு ஆஷ்லி என்ற பெண் குழந்தை பிறந்தார். ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்த நிலையில் அதில், மூத்த மகன் பியூவை மட்டும் தனது அரசியல் வாரிசாக வளர்த்தெடுத்தார் ஜோ பிடன். ஆனால் எதிர்பாராத விதமாக மூளை புற்றுநோய் காரணமாக பியூ கடந்த 2015-ம் ஆண்டு மரணத்தை தழுவினார். அரசியலில் தனக்கு ஆகச்சிறந்த உதவிகளை செய்வார் என ஆசை ஆசையாய் வளர்த்த மகன் புற்றுநோயால் இறந்த நிகழ்வு ஜோ பிடனை உலுக்கி எடுத்துவிட்டது.

போதைப்பொருள்
ஜோ பிடனின் மற்றொரு மகனான ஹண்டர் குடிக்கு அடிமையாகி போதைப்பொருள்களை உட்கொண்டு தனது எதிர்காலத்தையே சிதைத்துக்கொண்டார். கோக்கைன் சோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்ததால் கடந்த 2014-ம் ஆண்டு அமெரிக்க கடற்படை பிரிவில் இருந்து நீக்கப்பட்டார் ஹண்டர். ஜனநாயக கட்சி ஆட்சியிலிருந்தும் மகனுக்காக எந்த சிபாரிசுக்கும் செல்லவில்லை ஜோ பிடன்.

33 ஆண்டு கனவு
அமெரிக்க அதிபராக வரவேண்டும் என்பது ஜோ பிடனின் 33 ஆண்டு கால கனவு என்று கூட சொல்லலாம். 1987-ம் ஆண்டு ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும் உட்கட்சி தேர்தலில் தோல்வியை தழுவினார். ஒபாமா அதிபராக இருந்தபோது 8 ஆண்டுக்காலம் துணை அதிபராக இருந்தார். 2015-ல் மகன் மரணமடைந்ததால் அந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்த இவர் 2016 அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை.

அரசியல் பதவி
ஜோ பிடன் 1972-ம் ஆண்டு தனது 29-வது வயதில், அதாவது மிக இளம் வயதில் டெலாவேர் மாகாணத்தில் இருந்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வரலாற்றில் இளம் வயதில் எப்படி செனட் உறுப்பினர் ஆனாரோ, அதேபோல் 77 வயதில் அதிபரான முதல் நபர் என்ற பெருமையை ஜோ பிடன் அடைவாரா என்பதை சற்று நேரத்தில் தெரிந்துகொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications