Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிடன் ஒரு முட்டாள்.. பெரிய ஆபத்து வரப்போகிறது! விளாசிய டிரம்ப்.. என்ன ரஷ்யா பற்றி இப்படி சொல்கிறாரே!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஊமையாக இருப்பதால் தான் ரஷ்யா அதிபர் புடின் புத்திசாலியாக செயல்படுகிறார் என டொனால்ட் டிரம்ப் கூறினார்.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்வை விரைவில் ரஷ்ய படைகள் கைப்பற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை தடுக்கும் நோக்கத்தில் உக்ரைன் ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் உக்ரைன்-ரஷ்யா படைகள் இடையே மோதல் வலுத்துள்ளது.

ரஷ்யா படை முன்னேற்றம்

ரஷ்யா படை முன்னேற்றம்

உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் நடவடிக்கையை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தொடர்ச்சியாக கண்டித்து வருகின்றனர். மேலும் ரஷ்யாவை கட்டுப்படுத்துவதற்காக அதன் மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ஆனால் ரஷ்ய அதிபர் புடின் இதையெல்லாம் பெரிதாய் எடுத்து கொண்டதாய் தெரியவில்லை. தொடர்ந்து ரஷ்ய படைகளை முன்னேறி செல்ல உத்தரவிட்டுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் கருத்து

டொனால்ட் டிரம்ப் கருத்து

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடினின் செயல்பாடு குறித்து 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்து இருந்தார். அப்போது, ‛‛உக்ரைனின் ஒரு பெரும்பகுதியை சுதந்தரம் பெற்றதாக புதின் அறிவித்துள்ளார். அவர் ஒரு மேதை. உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் நபராக புடின் இருக்க போகிறார். எனக்கு புடினை நன்கு தெரியும். நான் அவருடன் நன்கு பழகினேன். அவர் என்னை விரும்பினார். நானும் அவரை விரும்பினேன்'' என பெருமையாக கூறினார்.

விமர்சனம்

விமர்சனம்

ஆனால் தற்போது டொனால்ட் டிரம்ப், ரஷ்யா அதிபர் புடினை கடுமையாக தாக்கினாலும் அவரை புத்திசாலி என கூறியுள்ளார். மேலும் உக்ரைன் மீதான போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஊமையாக இருப்பதாக அவர் விமர்சனம் செய்துள்ளார். புளோரிடா ஒர்லாண்டோவில் நடந்த பாரம்பரிய அரசியல் நடவடிக்கை தொடர்பான மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:

பயங்கரமானது

பயங்கரமானது

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் பயங்கரமானது. இத்தகைய சீற்றம், அட்டூழியம் ஒருபோதும் நடந்திருக்ககூடாது. உக்ரைனின் பெருமைமிகு மக்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும். கீவ் நகரில் உள்ள உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜோலன்ஸ்கி தைரியம் மிக்கவர்.

ஊமைகளாக

ஊமைகளாக

இந்த விவகாரத்தில் ஜோபிடனின் செயல் கேலிக்குத்தாகவும், மனிதகுலத்தின் மீது நடத்தும் தாக்குதலாகவும் உள்ளது. இது வருத்தமளிக்கிறது. ரஷ்ய அதிபர் புடின் , ஜோபிடனை வாத்திய கருவியான டிரம் போல் வாசிக்கிறார். இது அழகான விஷயமல்ல. உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பு, ஜோபிடனின் பலவீனத்தை காட்டுகிறது. இதுதான் உக்ரைனின் தற்போதைய நிலைக்கு காரணம். புடின் ஒரு புத்திசாலி. ஆனால் நேட்டோ நாடுகள் புத்திசாலிகளாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் தற்போதைய பிரச்சனை என்பது புடின் புத்திசாலி என்பதில் இல்லை. ஜோ பிடன் உள்ளிட்ட தலைவர்கள் ஊமைகளாக உள்ளனர்

அமைதியாக..

அமைதியாக..

அமெரிக்க தேர்தலில் மட்டும் முறைகேடுகள் நடக்காமல் இருந்திருந்தால் இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் நடைபெற்று இருக்காது என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். நான் அதிபராக இருந்த காலக்கட்டத்தில் உலகம் அமைதியாகவும், வலுவாகவும் இருந்தது. ரஷ்யா, அமெரிக்காவை மதித்தது.

தோற்கடிப்போம்

தோற்கடிப்போம்

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது கிரிமியாவிலும், தற்போது உக்ரைனிலும் ரஷ்யா நுழைந்துள்ளது. நான் அதிபராக இருந்தபோது ரஷ்யா எல்லை மீறவில்லை. 21ம் நூற்றாண்டில் அமெரிக்க அதிபர்களில் எனது பதவிகாலத்தில் தான் ரஷ்யா பிற நாட்டில் படையெடுக்காமல் இருந்தது. ஏற்கனவே இரண்டு முறை ஜனநாயககட்சியினரை அதிபர் தேர்தலில் மோசமாக தோல்வியடைய செய்துள்ளோம். இதை மூன்றாவது முறையாகவும் 2024 தேர்தலில் மேற்கொள்வோம். '' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+