அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - ஜோ பிடன் தேர்தல் வாக்குறுதி
நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த கவனம் செலுத்துவேன் என ஜோ பிடன் கூறியுள்ளார்.
வாஷிங்டன்: தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆனால், அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். மக்கள் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் கூறியுள்ளார் ஜோ பிடன்.
கொரோனா தடுப்பூசியானது அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும் தலைவர்கள் அறிவித்து வருகின்றனர். பீகார் தேர்தலில் பாஜகவின் முக்கிய வாக்குறுதியே இலவச கொரோனா தடுப்பூசிதான். இதை பார்த்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் இலவசமாக அனைவருக்கும் போடப்படும் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டிலும் சில மாதங்களில் தேர்தல் வர உள்ளதால் முன்கூட்டியே வாக்குறுதி அளித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தனது பிரச்சாரத்தின்போது பேசுகையில், தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆனால், அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய ஜோ பிடன், குடியரசுக் கட்சி ஆட்சியில் அதிபராக இருப்பவர் வைரஸை எதிர்த்துப் போராடுவதை கைவிட்டுவிட்டார். மேலும் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறுகிறார். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த கவனம் செலுத்துவேன்.
கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். மக்கள் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி இலவசமாக தடுப்பூசி போடப்படும். செலவினங்களுடன் போராடும் மக்களுக்கு உதவி செய்வோம் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications