வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் ஜோ பிடன்.. மவுனம் கலைக்காத டொனால்ட் டிரம்ப்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன் ( ஜோ பைடன்) அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக எதனையும் தெரிவிக்காமல் இருக்கிறார்.

உலகிலேயே கொரோனாவால் பேரழிவை சந்தித்து வரும் நாடு அமெரிக்காதான். இப்போதும் நாள்தோறும் சுமார் 2 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. மேலும் 2,000 முதல் 3,000 பேர் வரை கொரோனாவால் மாண்டு வருகின்றனர்.

Joe Biden to get Coronavirus vaccine next week

கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசிகளை மக்களுக்கு கொடுப்பதில் உலக நாடுகள் முழுவதும் தீவிரம் காட்டி வருகின்றன. அமெரிக்காவிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனிடையே அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் வெள்ளிக்கிழமையன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இருக்கிறார்.

அதேபோல் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யபட்டுள்ள ஜோ பிடன் (ஜோ பைடன்) அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள திட்டமிட்டுள்ளார். ஆனால் கொரோனா விவகாரத்தில் மிகவும் அலட்சியமாக இருந்த அதிபர் டொனால் டிரம்ப் இதுவரை கொரோனா தடுப்பூசியை தாம் போட்டுக் கொள்வது பற்றி எதனையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.

English summary
US President-elect Joe Biden will get the coronavirus vaccine next week. But President Donalt trump not to announce to get the Vaccine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X