அதுக்கெல்லாம் கமலா சரிப்பட்டு வர மாட்டார்.. என் மகள் தான் லாயக்கு.. என்ன இப்படி சொல்லிட்டாரு டிரம்ப்
ஜனாதிபதி பதவிக்கு தன் மகள்தான் சரியான நபர் என்று டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
வாஷிங்டன்: "அமெரிக்காவில் ஒரு பெண் ஜனாதிபதியை பார்க்க எனக்கு ஆசையாக உள்ளது.. அதற்கு ஆதரவும் அளிக்கிறேன்.. ஆனால், கமலா ஹாரிஸ் அந்த ஜனாதிபதியாக இருப்பதற்கு "திறமையானவர் கிடையாது".. தன்னுடைய மகள் இவான்கா அந்த பதவிக்கு சிறந்த வேட்பாளராக இருப்பார்" என்று ட்ரம்ப் குடும்ப அரசியலை வெள்ளை மாளிகையில் இழுத்து கொண்டு வந்து பேசியுள்ளார்!
உலகமே ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ள தேர்தலை அமெரிக்கா வரும் நவம்பரில் சந்திக்க போகிறது.. 3-ம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடக்க நடைபெறவுள்ளது... அதற்காக தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் 2 கட்சிகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது... ஒன்று, ஜனநாயக கட்சி, இன்னொன்று குடியரசு கட்சி... குடியரசு கட்சி சார்பாக, அதிபர் டிரம்ப் மறுபடியும் போட்டியிடுகிறார். அதனை அக்கட்சியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

துணை அதிபர்
அதேபோல, ஜனநாயக கட்சியின் சார்பாக ஜோ பைடன் போட்டியிடுகிறார்.. துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த 55 வயதான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.. பிரச்சாரமும் அங்கு சூடுபிடித்து வருகிறது... இதில் டிரம்ப்பின் பிரச்சாரம்தான் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது.. இதுவரைக்கும் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்காமல், மிரட்டியும், உருட்டியும், பயமுறுத்தியும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறாராம்.

வேலைவாய்ப்பு
நேற்று முன்தினம் இவர் பேசும்போது, "சட்டத்தை மதிக்கும் அமெரிக்கர்களை நாம் பாதுகாக்கிறோமா அல்லது வன்முறை அராஜகவாதிகள், கிளர்ச்சியாளர்கள், மக்களை அச்சுறுத்தும் குற்றவாளிகளுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை தர போகிறோமா என்பதைதான் உங்கள் வாக்குதான் தீர்மானிக்க போகிறது.. அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புக்கு எதிரானவர் ஜோ பிடென்.. எதிர்க்கட்சி வென்றால் நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து நாசமாகிடும்" என்றார்.

மமதை பேச்சு
ஜார்ஜ் கொலையால் ஏற்கனவே அங்கு மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.. கொரோனாவை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டு, கொத்து கொத்தாக பலர் பரலோகம் போய் சேர்ந்துவிட்டனர்.. எல்லா நாடுகளுடனும் வம்பு, சண்டை, பஞ்சாயத்து, சர்ச்சை பேட்டிகள் என நாலாபக்கமும் சிக்கி கொண்டுள்ள நிலையிலும் டிரம்பின் மததை பேச்சு கொஞ்சமும் அடங்கவில்லை என்கிறார்கள்... அதுமட்டுமல்ல, பெரும்பான்மையினர்களான அமெரிக்கர்களின் ஓட்டுகளை மட்டுமே குறிவைத்து டிரம்ப் ஓட்டு வேட்டை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

கமலா ஹாரீஸ்
இதனிடையே, எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் கமலா ஹாரீஸ் பெயரை டேமேஜ் செய்தவாறே பேசி வருகிறார்.. நேற்று நியூ ஹாம்ப்ஷயரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் பேசும்போதுகூட கமலாவை பகிரங்கமாக மட்டம் தட்டினார்.

ஜனாதிபதி
"நான் முதல் பெண் ஜனாதிபதியை பார்க்க ஆசைப்படுகிறேன்.. எனது ஆசையும் உங்களுக்கு தெரியும்.. அதற்கு நான் எப்போதும் ஆதரவு அளிப்பவன்.. ஆனால், கமலா ஹாரிஸ் அதற்கு திறமையானவர் கிடையாது.. என்னுடைய மகளும், வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகருமான இவான்கா ட்ரம்ப் மட்டுமே அந்த பதவிக்கு தகுதியானவர்.. அந்த பதவிக்கு கமலா ஹாரிஸ் தகுதியானவர் கிடையாது" என்றார்.

பரபரப்பு
அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக ட்ரம்ப் அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் பங்கேற்ற முதல் பிரச்சார கூட்டம் இதுவாகும்.. இந்த முதல் கூட்டத்திலேயே மகளை பரிந்துரைத்தது பலருக்கும் அதிர்ச்சியையே உண்டு பண்ணி வருகிறது!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications