இதுக்கா இம்புட்டு விலை.. வெஸ்ட் போட்டதாச்சே.. 1 மில்லியன் டாலரையும் தாண்டி ஓடுதாம்!
வாஷிங்டன்: அமெரிக்க ராப் பாடகர் கன்யே வெஸ்ட் அணிந்த யீஸி ஸ்னீக்கர் (ஷூ) 1 மில்லியனுக்கும் அதிகமாக ஏலத் தொகையைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளதாம்.

2008 ஆம் ஆண்டில் நடந்த 50 வது வருடாந்திர கிராமி விருதுகளில் அமெரிக்க ராப் பாடகர் கன்யே வெஸ்ட் அணிந்திருந்த நைக் ஏர் யீஸி 1 ஷூ தான் இது. இதை தற்போது ரியான் கிங் என்பவர் ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளார். பிரபலமான சோத்பே நிறுவனம்தான் இதை ஏலத்தில் விட்டுள்ளது.

இந்த வகை ஸ்னீக்கர்கள் மிகவும் மதிப்புமிக்க மற்றும் விரும்பப்பட்ட ஸ்னீக்கர்களில் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த மாத இறுதியில் ஹாங்காங்கில் இது காட்சிக்கு வைக்கப்படுகிறது. இதன் ஏலத் தொகை இப்போதே 10 லட்சம் டாலரைத் தாண்டி விட்டதாம்.

இதுவரை இந்த பெரிய தொகைக்கு எந்த ஷூவும் ஏலத்தில் போனதில்லை. இதற்கு முன்பு பிரபல கூடைப்பந்தாட்டா வீரர் மைக்கேல் ஜோர்டான் போட்டிருந்த ஷூதான் 6,15,000 டாலருக்கு ஏலத்தில் போயிருந்தது. ஒரு வேளை கென்யேவின் ஷூ 10 லட்சம் டாலரைத் தாண்டி ஏலத்திற்குப் போனால் அது புதிய சாதனையாக இருக்கும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications