மோடியை நேர்காணல் செய்ய.. 45 மணி நேரம் சாப்பிடாமல் விரதம் இருந்த லெக்ஸ் ஃப்ரிட்மேன்
வாஷிங்டன்: அமெரிக்க புகழ்பெற்ற பாட்காஸ்ட் தொகுப்பாளரும், கணினி விஞ்ஞானியுமான லெக்ஸ் ஃப்ரிட்மேன், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசுவதற்காக இரு நாட்கள் பச்ச தண்ணி மட்டுமே குடித்து விரதம் இருந்ததாக தெரிவித்ததை கேட்ட பிரதமர் மோடி ஆச்சரியத்துடன் நன்றி தெரிவித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினார். பிரதமருடன் நடத்திய போட்காஸ்ட் (podcast) நிகழ்ச்சியின்போது இந்த தகவலை அவர் தெரிவித்தார்.
"இந்த உரையாடலுக்காகவே நான் 45 மணி நேரமாக தண்ணீர் மட்டுமே அருந்தி, உணவு எதுவும் இல்லாமல் விரதமிருக்கிறேன். இந்த நேர்காணலுக்கு சரியான மனநிலையை அடையவும், உங்களுக்கு இணையாக ஆன்மீக ரீதியில் ஒன்றாக வரவும் இதை மேற்கொண்டேன்," என்று லெக்ஸ் ஃப்ரிட்மேன் கூறினார்.

இதை கேட்ட பிரதமர் மோடி சிரித்தபடி, "உங்கள் விரதத்தை எனது மரியாதைக்காக மேற்கொண்டது என நினைக்கும்போது, நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிலளித்தார்.
விரதம் வாழ்க்கையை மாற்றுகிறது
விரதம் இருப்பது எப்படி மனதையும் உடலையும் மாற்றுகிறது என்பதை விளக்கிய பிரதமர் மோடி, "விரதம் என்பது மிகப் பழமையான நடைமுறை. இது என்னை யாரும் சிந்திக்காத விஷயங்களை சிந்திக்க உதவுகிறது. மனித உணர்வுகளை மிகுந்த பரிசோதனைவியல் கொண்டு கூர்மையாக மாற்றுகிறது" என்றார்.
"விரதங்களால் உங்கள் உணர்வுகள் மேலும் கூர்மையாக, புத்திசாலித்தனமாக, உங்கள் பேச்சு கேட்பதாக மாறும். உங்கள் பார்வை, உணர்வு திறன் கூடிய உண்மைகளை வெளிப்படுத்தும்," என்று மோடி கூறினார்.
இந்தியாவின் வாழ்க்கை முறை
இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தில் விரதத்திற்கு உள்ள முக்கிய பங்கை விளக்கிய பிரதமர், "எங்கள் வேதம், ஆன்மீக வழிபாடுகளில் மனம், ஆன்மா, உடல், புத்திசாலித்தனம் மற்றும் மனிதாபிமானத்தை உயர்த்துவதற்கான பல்வேறு வழிகள் உள்ளன. விரதமும் அதில் ஒன்று," என்றார்.
"நாங்கள் இந்து மதத்தை வெறும் வழிபாடு முறையாகப் பார்க்கவில்லை, அதற்குப் பதிலாக அது வாழ்க்கை முறையாகவே பார்க்கப்படுகிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இது ஒரு உட்புற, வெளிப்புற செழுமையை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த கருவி என்றும், "வாழ்க்கையை ஆழமான மாற்றத்திற்கு கொண்டு செல்லும் ஒரு நடைமுறை" என்றும் மோடி விளக்கினார்.
விரதம் ஒழுங்கை வளர்க்கும் பயிற்சி
விரதம் இருப்பது ஒன்றே ஆன்மீகத்தில் உயர் நிலையில் இருப்பதற்கான வழி அல்ல என்றும், இது இந்தியாவின் பண்பாட்டு மற்றும் தத்துவ ரீதியாக ஒழுங்கு வளர்க்கும் ஒரு பயிற்சி என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தனது சொந்த அனுபவங்களை பகிர்ந்த அவர், "எனக்கு ஒரு மலர் கூட மிகவும் வண்ணமயமாக தோன்றும். நீரைப் பருகும் போதே கூட அதன் மென்மையான நறுமணத்தை என்னால் உணர முடியும். யாராவது உங்கள் அருகே தேநீர் எடுத்து செல்லும்போது, அதன் வாசனையை கூட உணர முடியும். இதற்கெல்லாம் காரணம் மன ஒருமைப்பாடுதான்," என்று மோடி கூறினார்.
இந்த உரையாடல், இந்தியாவின் பாரம்பரிய முறைகள் அறிவியல் ரீதியாக எவ்வளவு ஆழமாகப் பொருள் கொண்டுள்ளன என்பதை உலகறிய செய்துள்ளது என்கிறார்கள் பாட்காஸ்ட் கேட்டவர்கள். விசா தராத அமெரிக்காவில் மோடிக்கு இப்போது செல்வாக்கு பெருகிவிட்டது பார்த்தீர்களா என்கிறார்கள் பாஜக ஆதரவாளர்கள். வழக்கம்போல மோடி தனது புகழை பெரிதுபடுத்தி பேசியுள்ளார் என்கிறார்கள் எதிர்க் கட்சி ஆதரவாளர்கள்.
இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
-
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications