265 ஆண்டாக பூட்டி வைக்கப்பட்டிருந்த காதல் கடிதங்கள்.. படித்து பார்த்து அசந்துபோன பிரிட்டன் பேராசிரியர்
வாஷிங்டன்: 265 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனால் சிறை பிடிக்கப்பட்ட பிரெஞ்சு கப்பலில் பணியாற்றிய மாலுமிகளுக்கு அவர்களின் குடும்பத்தினர் எழுதிய கடிதங்களை பிரிட்டன் கடற்படை தடுத்து பறிமுதல் செய்தது. 3 நூற்றாண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த இந்த கடிதங்கள் பிரித்து பிடிக்கப்பட்டு உள்ளது.
18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்கும் பிரிட்டனுக்கும் இடையே போர் நடைபெற்றது. 1757-58 ஆம் ஆண்டு காலத்தில் இந்த போரானது நடைபெற்றது. இந்த போரின் போது பிரெஞ்சு போர்க்கப்பலில் பணியாற்றிய மாலுமிகளுக்கு அவர்களது குடும்பத்தினர் நுற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி அனுப்பினர். போர்க்கப்பலில் பணியாற்றும் மாலுமிகளின் மனைவிகள், பெற்றோர்கள், காதலிகள் என அவர்களது நேசத்திற்கு உரியவர்கள் இந்த கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

கலேட்டே (Galatee) என்ற அந்த போர்க்கப்பலை பிரிட்டனின் ராயல் கடற்படை சிறைபிடித்து தங்கள் கட்டுப்பாட்டுகுள் கொண்டு வந்தது. அந்த சமயத்தில் தான் பிரெஞ்சு கப்பல் சிப்பந்திகளுக்கு அவர்களின் குடும்பத்தினர் எழுதி அனுப்பிய கடிதங்களையும் பிரிட்டன் கடற்படை பறிமுதல் செய்தது. எந்த ஓரு கடிதத்தையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு டெலிவரி செய்யாமல் தடுத்து வைத்தது.
பிரெஞ்சு தபால் துறையும் பலமுறை இந்த கடிதங்களை உரியவர்களுக்கு சென்று சேர்க்க முயற்சித்துள்ளது. பல மாதங்களாக இது நடைபெற்று இருக்கிறது. பின்னர் 1757-58 ஆம் ஆண்டில் இந்த கப்பலை பிரிட்டன் சிறைபிடித்தது தெரியவந்ததும் அனைத்து கடிதங்களும் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. பின்னர் அங்கிருந்து லண்டனில் உள்ள கடற்படை நிர்வாக துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

கப்பல் சிப்பந்திகளுக்கு குடும்பத்தினர் எழுதி அனுப்பிய தனிப்பட்ட இந்த கடிதங்களை பிரிட்டன் கடற்படை பிரித்து படித்தும் பார்த்து இருக்கிறார்கள். இதில் ஏதாவது ராணுவ தகவல் பகிரப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நுற்றுக்கணக்கான கடிதங்களை படித்து பார்த்து இருக்கிறார்கள். ஆனால், இந்த கடிதத்தில் வெறும் குடும்ப விஷயங்களே இருந்ததால், அவற்றை ஸ்டோரேஜ்களில் போட்டு வைத்து இருக்கிறார்கள்.
இந்த கடிதம் மூன்று நூற்றாண்டுகளாக அப்படியே பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதாவது 265 ஆண்டுகள் தற்போது ஆகிவிட்ட நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள கல்வியாளர்களின் கைக்கு கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் கியூ- நகரில் உள்ள தேசிய ஆவண காப்பகத்தில் உள்ள இந்த கடிதங்கள் இருந்த பெட்டியை பேராசிரியர் ரெனாட் மோரியக்ஸ் ஆர்வத்தில் திறந்து பார்த்துள்ளார்.

கிட்டத்தட்ட 104 கடிதங்கள் அந்த பெட்டியில் இருந்துள்ளன. இது குறித்து ரெனாட் மோரியாக்ஸ் கூறுகையில், 'இந்த தனிப்பட்ட கடிதங்களை எழுதிய பிறகு படித்து பார்க்கும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். இந்த கடிதத்தை படித்து பார்க்கும் போது குடும்பத்தினர் உணர்வுபூர்வமாக எழுதியிருந்ததை நினைத்து பார்க்க முடிந்தது. அந்த கப்பலில் பணியேற்றிய சிப்பந்திகள் பலரின் மனைவிகள், பெற்றோர்கள் மிக உருக்கமாக எழுதியிருக்கின்றனர்.
சிலரோ, எங்கு இருக்கிறீர்கள், எப்படி இருக்கீறீர்கள் என்று கூட எங்களுக்கு தெரியாது என மிகவும் உருக்கமாக எழுதியிருக்கிறார்கள் என்றார். இது தொடர்பாக ஆய்வையும் அந்த பேராசிரியர் மேற்கொண்டுள்ளார். இது குறித்த ஆய்வு Annales, Histoire, Sciences Sociales என்ற இதழில் வெளியாகியுள்ளது.
மேலும் பேராசிரியர் கூறுகையில், இன்றைய கால கட்டத்தில் ஸூம், வாட்ஸ் ஆகியவை நம்மிடம் உள்ளன. ஆனால், 18 ஆம் நூற்றாண்டில் வெறும் கடிதங்கள் மட்டுமே மக்களிடம் இருந்தன. ஆனால், அவர்கள் உணர்வுப்பூர்வமாக எழுதியிருந்தது பரிச்சயமான ஒன்றாகவே இருந்தது" என்று கூறினார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications