“ஒரு டான்ஸ் ஆடியது குத்தமா.. அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்.. என்ன இப்படி ஆகிடுச்சு
வாஷிங்டன்: அமெரிக்காவில் அமைந்துள்ள இரண்டாம் உலகப்போர் நினைவிடத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நடனமாடி, வீடியோ எடுத்துள்ளார். அவர் செய்த காரியம் இப்போது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனால் அவர் நாடு கடத்தப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு விசா நடைமுறைகள் கடுமையாகிவிட்டனர். மேலும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ப கட்டுப்பாடுகளையும் எதிர்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே அமெரிக்காவின் இரண்டாம் உலகப்போர் நினைவிடத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நடனமாடி, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

சர்ச்சை
இதுவே இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.. அமெரிக்காவில் இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழலில், அமெரிக்க அதிகாரிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த ஒரே ஒரு வீடியோவால் அவர் அமெரிக்காவில் இருந்தே கூட நாடுகடத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்கப் போர் நினைவிடத்தில் நடனமாடி நபர் மது ராஜு என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் குடியேற்றம் இல்லாத விசா மூலம் அமெரிக்காவில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. முதலில் அமெரிக்காவில் டிக் டாக் தளத்தில் பகிரப்பட்ட வீடியோ, பிறகு ட்விட்டர் இன்ஸ்டாவிலும் வைரலானது.
அதில் மது ராஜு அமெரிக்காவின் இரண்டாம் உலகப்போர் நினைவிடத்தில் ஒரு பெண்ணுடன் நடனமாடுகிறது. இதுவரை அந்த பெண் யார் என்பது குறித்த தகவல் தெரியவரவில்லை. அமெரிக்காவைப் பொறுத்தவரை அந்நாட்டு மக்கள் வணங்கும் ஒரு இடமாக இந்த நினைவிடம் உள்ளது. 2ம் உலகப் போரில் அமெரிக்காவுக்காகச் சேவையாற்றிய 1.6 கோடி மக்களையும், உயிரிழந்த 4 லட்சத்திற்கும் அதிகமானவர்களையும் நினைவுகூரும் வகையில் இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்கர்கள் கிட்டத்தட்டப் புனிதமான இடமாகவே பார்க்கிறார்கள். இங்கு நடனமாடி வீடியோ எடுத்ததே பெரும் சர்ச்சை வெடித்தது.
கடும் தாக்கு
அமெரிக்கர்களின் தியாகத்துடன் தொடர்புடைய இந்த இடத்தை அவமதித்ததாக ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்தனர். போர் நினைவிடம் போல முக்கியமான சென்சிடிவ் இடங்களை சமூக வலைத்தளங்களில் லைக் பெற பயன்படுத்தக்கூடாது எனப் பலரும் சாடினார்கள். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "இது தியாகத்திற்கும் அமைதிக்கும் உரிய இடம்.. டிக் டாக் நடன மேடை அல்ல’ என்றார். மற்றொரு நபர், "இதுபோன்ற நபர்களே வெளிநாட்டினர் குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறார்கள்" என்று சாடினார். உள்ளூர் விதிகள் மற்றும் மதிப்புகளைத் தெரிந்து கொண்டு இதுபோன்ற காரியங்களைச் செய்ய வேண்டும் என இன்னொரு நபர் பதிவிட்டுள்ளார்.
இன்னும் சில அமெரிக்க நெட்டிசன்கள் மது ராஜுவின் பெர்சனல் தகவல்களையும் வெளியிடத் தொடங்கினர். அவர் எங்கு வேலை செய்கிறார் என்பது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். மேலும், அவர் ஒரு டான்ஸ் ஸ்டுடியோவை நடத்தி வருவதாகவும் நெட்டிசன்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய சூழலில், அவர் தனது டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை டிஆக்டிவேட் செய்துவிட்டார். மேலும், ஸ்டுடியோவின் இணையதளம், சமூக வலைத்தளப் பக்கங்கள் அகற்றப்பட்டன.
நாடுகடத்தல்?
இது இத்தோடு நிற்கவில்லை.. இச்சம்பவம் அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் ராஜுவின் விசாவை ரத்து செய்து நாடுகடத்த வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. அமெரிக்கக் குடியேற்றச் சட்டப்படி, விசா வைத்திருப்பவர்கள் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டாலோ அல்லது தங்குவதற்கான விதிமுறைகளுக்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, விசா ரத்து செய்யப்பட்டு, நாடுகடத்தப்படுவார்கள். ராஜு இப்போது அந்த ஆபத்தைத் தான் எதிர்கொண்டுள்ளார்.
இந்தியர்களும் தாக்கு
அமெரிக்காவில் டான்ஸ் ஆடுவது குற்றம் இல்லை. ஆனால், நினைவுச் சின்னங்களில் அனுமதி இல்லாமல் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஒழுங்கற்ற நடத்தையாகக் கருதப்படும். நினைவிடத்தை நிர்வகிக்கும் தேசியப் பூங்கா நிர்வாகம், பார்வையாளர்கள் தேசிய நினைவுச் சின்னங்களில் கண்ணியத்தைப் பேண வேண்டும் என வலியுறுத்துகிறது. அதைத் தாண்டி இவர் டான்ஸ் ஆடியதே சர்ச்சைக்குக் காரணம்.
இதில் விஷயம் என்னெவன்றால் அமெரிக்கர்கள் மட்டுமின்றி இந்திய நெட்டிசன்களும் கூட அவரை கடுமையாகச் சாடி வருகிறார்கள். ராஜுவை போலச் சிலர் இதுபோல செய்யும் காரியத்தால் ஒட்டுமொத்தமாக அனைத்து அமெரிக்க வாழ் இந்தியர்களும் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகச் சாடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications