"மார்க் ஜுக்கர்பெர்க் உயிரிழக்க கூடும்.." பேஸ்புக் நிறுவனம் பரபர தகவல்.. அதிர்ச்சி தரும் பின்னணி
வாஷிங்டன்: உலகில் புகழ்பெற்ற சமூக வலைத்தளமான பேஸ்புக்கை நிறுவிய மார்க் ஜுக்கர்பெர்க் எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனமே கூறியிருக்கிறது.
இந்த நவீன டெக் காலத்தில் சமூக வலைத்தளங்கள் நமது வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறது. அதில் முதலில் உலகை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போட்ட ஒரு சமூக வலைத்தளம் என்றால் அது பேஸ்புக் தான். இதை உருவாக்கியவர் மார்க் ஜுக்கர்பெர்க்.

அதன் பிறகு மார்க் ஜுக்கர்பெர்க் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் எனப் பல நிறுவனங்களை வாங்கியிருந்தார். இதற்கிடையே மார்க் ஜுக்கர்பெர்க் குறித்து அவரது மெட்டா நிறுவனம் பகீர் தகவலைக் கூறியுள்ளது.
மெட்டா: பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் தனது சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் பரபர தகவலைச் சொல்லியுள்ளது. அதாவது பேஸ்புக் நிறுவனரும் மெட்டாவின் சிஇஓவாகவும் இருக்கும் மார்க் ஜுக்கர்பெர்க் குறித்து பகீர் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். அதில் மார்க் ஜுக்கர்பெர்க்கின் வாழ்க்கை முறை தேர்வுகளில் சரியாக இருப்பது போலத் தெரியவில்லை என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது மார்க் ஜுக்கர்பெர்க் இப்போது எம்எம்ஏ எனப்படும் மிக்ஸ் மார்ஷல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை ஆர்வமாக கற்று வருகிறார். இதை அவரது தனிப்பட்ட விருப்பம் என்று கடந்து போய்விட முடியாது. அவருக்கு எதாவது ஏற்பட்டால் அது தனிப்பட்ட இழப்பு மட்டுமில்லை.. அது மெட்டா நிறுவனத்திற்கும் மற்றும் அதன் முதலீட்டாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அந்த வருடாந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோட் சூட்டை கழட்டி வைத்துவிட்டு.. அடிதடியில் இறங்கிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்! பரபர
மார்க் ஜுக்கர்பெர்க்: விமானங்களை இயக்குவது, எம்எம்ஏ சண்டை போட்டியில் கலந்து கொள்வது என்று ஜுக்கர்பெர்க் செயல்கள் இணையத்தில் டிரெண்டானாலும் கூட அதை முதலீட்டாளர்கள் ரசிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. இது தொடர்பாக அந்த வருடாந்தர அறிக்கையில், "ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கடுமையான காயம் மற்றும் உயிரிழப்பைக் கூட ஏற்படுத்தக் கூடிய செயல்களில் பங்கேற்கின்றனர்.
ஜுக்கர்பெர்க் எதாவது காரணத்திற்காக இல்லாமல் போனால், அது எங்கள் செயல்பாடுகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது நாம் எல்லாம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தனிப்பட்ட முடிவாகவே இருக்கும். ஆனால், ஜுக்கர்பெர்க் போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அது ஒட்டுமொத்தமாக நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்றே இதன் பொருளாகும்.
பரவிய தகவல்: ஜுக்கர்பெர்க் கடந்த பல மாதங்களாகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். கடந்த நவம்பர் மாதம் அவர் எம்எம்ஏ பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது உடலில் காயம் ஏற்பட்டு, ஆப்ரேஷன் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். மேலும், எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் இடையே மோதல் நடக்க உள்ளதாகவும் கூட இணையத்தில் தகவல்கள் பரவின. இவையெல்லாம் உலகளவில் டிரெண்டிங் ஆனது.
தன்னை பற்றி மெட்டா நிறுவனத்தின் அறிக்கையில் இப்படிக் கூறப்பட்டுள்ளது குறித்து மார்க் ஜுக்கர்பெர்க் கூட ரியாக்ட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "ஹை ரிஸ்க்= ஹை ரிவார்ட்" என்று பதிவிட்டுள்ளார். என்ன தான் மெட்டா நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையிலேயே அவர்கள் தங்கள் நிறுவனருக்கு என்ன வேண்டுமானாலும் ஆகலாம் எனக் கூறியிருந்தாலும் இது அவர்களின் பங்குகளைப் பாதிக்கவில்லை. சொல்லப்போனால் 2 நாட்களில் அவர்களின் பங்கு உயர்ந்தே இருக்கிறது
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications