வாவ்! உலகின்நீளமான மூக்கு.. கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற வில்லியம் வெட்டர்ஸ்.. யார் இந்த ஐரோப்பியர்?
வாஷிங்டன்: இங்கிலாந்தை சேர்ந்த 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவரின் மூக்கு உலகிலேயே நீளமானதாக சாதனை படைத்துள்ளது.
இதுவரை யாரும் செய்யாதது, இதுவரை செய்த சாதனையை முறியடிப்பது, புதிய முயற்சிகள், இயற்கை நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் வகையில் கின்னஸ் சாதனை புத்தகம், லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்டவை இருக்கின்றன.
இதுவரை இந்த சாதனை புத்தகத்தில் நீளமான முடி, நீளமான நகம், நீளமான தாடி, நீளமான மீசை, குள்ளமான நபர், உயரமான நபர் உள்ளிட்டோர் பட்டியலில் இடம் பிடித்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால் உலகின் நீளமான மூக்கு கொண்டவர் பற்றி தெரியுமா?

தாமஸ்வெட்டர்ஸ்
இங்கிலாந்தை சேர்ந்தவர் தாமஸ் வெட்டர்ஸ். இவர்தான் நீளமான மூக்கு கொண்டவராக அறியப்படுகிறார். இவர் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். உலகின் மிக நீளமான மூக்கையுடைய இவர், சர்க்கஸ்களில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அக்காலத்தில் கேமராக்கள் இல்லாத காரணத்தினால் தாமஸ் வெட்டர்ஸின் புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை.

ஓவியங்கள்
ஆனால் அவருடைய மூக்கை ஓவியங்கள் மூலமும் மெழுகுச் சிலைகள் மூலமும் பார்க்க முடிகிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது புகைப்படங்களாவும் அவரது உருவம் வெளிவந்து கொண்டிருக்கிறது. தாமஸ் வெட்டர்ஸின் மூக்கின் நீளம் 7.5 அங்குலமாகும். அதாவது 19 செ.மீ. நீளம் கொண்டது. புரியும்படி கூற வேண்டுமானால் முழு அடி ஸ்கேலில் ஒரு செ.மீ. குறைத்துக் கொண்டால் என்ன அளவு வருகிறதோ அந்த அளவுதான் இவருடைய மூக்கு!

கார்ட்டூன்
இவரது மூக்கை வைத்து நிறைய கார்ட்டூன் படங்கள் தயாரிக்கப்பட்டன. அது போல் கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு நீளமான மூக்கு வைக்கப்படும் உத்தியும் வைக்கப்படுகிறது. இவர் குறித்து வேறு எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. தனது 50 வயதில் மரணமடைந்த தாமஸ் வெடர்ஸின் உலகின் நீளமான மூக்கு சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

கின்னஸ் சாதனை
வெட்டர்ஸின் சாதனையை கின்னஸ் சாதனை புத்தகம் ஏற்றுள்ளது. இதையடுத்து அவரது புகைப்படத்தை தனது சாதனை பட்டியலில் போட்டுள்ளது. இவர் 1770 ஆம் ஆண்டுகளில் இவர் வாழ்ந்திருக்கலாம் என தெரிகிறது. உயிரோடு வாழும் நபர்களில் தற்போது நீளமான மூக்கினை கொண்டவர், துருக்கி நாட்டை சேர்ந்த மெஹ்மெட் ஓசிரெக் வைத்திருந்தார். இந்த நபரின் மூக்கு கடந்த ஆண்டு சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவருடைய மூக்கின் நீளம் 3.46 அங்குலமாகும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications