கப்பல் தரையைதான் தட்டும்.. இதென்ன பாலத்தை தட்டுது? விபத்து எப்படியெல்லாம் நடக்குதுன்னு பாருங்க
நியூயார்க்: அமெரிக்காவில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த கடற்படை கப்பல் ஒன்று பாலத்தில் இடித்து விபத்தில் சிக்கியிருக்கிறது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 19 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் கப்பல் பாலத்தில் இடித்து நிற்பது தெளிவாக தெரிந்திருக்கிறது.

ராணுவ பயிற்சி பள்ளியில், பயிற்சி நிறைவடைந்ததும் கொண்டாடப்படுகிறது அல்லவா, அதுபோல மெக்சிகோ நாட்டின் கடற்படை ராணுவ பயிற்சி பள்ளியிலும், பயிற்சி முடிந்ததும், பாய்மர கப்பலில் கடற்படை வீரர்கள் சுற்றுலா போவார்கள். அப்படித்தான் மெக்சிகோவிலிருந்து ஒரு பாய்மரப்படகு கடந்த ஏப்.6ம் தேதி புறப்பட்டது.
மெக்சிகன் துறைமுகமான அகபுல்கோவிலிருந்து புறப்பட்டு, ஜமைக்காவின் கிங்ஸ்டன், கியூபாவின் ஹவானா, மெக்சிகோவின் கோசுமெல், நியூயார்க் என மொத்தம் 15 நாடுகளில் உள்ள 22 துறைமுகங்களை இந்த கப்பல் பார்வையிடும். மொத்த பயண நாட்கள் 254.
Just watched the Brooklyn Bridge get smoked live by a boat with a massive Mexican flag pic.twitter.com/R8eJKwJaJ2
— Nelson Slinkard (@TheWillieNelson) May 18, 2025
இந்த கப்பல் இன்று காலை நியூயார்க் வந்திருக்கிறது. அங்கிருந்து 'கிழக்கு நதி' வழியாக துறைமுகத்திற்கு வந்திருக்கிறது. கப்பல் முழுவதும் லைட் வெளிச்சம் மின்ன, படு ஜோராய் இந்த கப்பல் வந்ததை பார்த்த மக்கள் அதை வீடியோ எடுத்திருக்கிறார்கள். ஆனால் கப்பல் எதிர்பாராத விதமாக 'புருக்ளின்' பாலத்தின் மேல் மோதியிருக்கிறது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே அந்த விபத்து நடந்தது. மொத்தம் மூன்று கம்பங்கள் கப்பலில் இருந்தன. இதில், கடற்படை வீரர்கள் நின்றுக்கொண்டிருந்தார்கள். கம்பங்கள் பாலத்தில் மோதும்போது அவர்கள் மேலிருந்து கீழே விழுந்தனர். என்னால் வெறும் கண்களால் இதை சரியாக பார்க்க முடியவில்லை. மொபைலில் ஜூம் செய்து பார்த்தபோது வீரர்கள் உயிருக்கு போராடுவது தெரிந்தது. இருப்பினும் கப்பல் நிற்காமல் சென்றுக்கொண்டே இருந்தது" என்று கூறியுள்ளனர்.
நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் இது குறித்து கூறுகையில், "இந்த விபத்தில் தொடக்கத்தில் 12 பேர் காயமடைந்ததாக தெரிய வந்தது. இப்போது இந்த எண்ணிக்கை 19ஆக உயர்ந்திருக்கிறது. இவர்களில் 4 பேர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள். 2 பேர் உயிரிழந்துள்ளனர். நல்வாய்ப்பாக யாரும் தண்ணீரில் விழவில்லை" என்று கூறியுள்ளார்.
சுமார் 297 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட கடற்படை பயிற்சி கப்பல் விபத்தில் சிக்கியிருக்கும் காட்சிகள் சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications