Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் ஐரோப்பிய நாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற விதிகள் மற்றும் ஈரானுக்கு எதிரான போர், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது எனும் கோஷத்துடன் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ, மன்ஹாட்டன், மின்னபோலிஸ் ஆகிய பகுதிகளில் இந்த போராட்டம் நடைபெற்றது.

Millions March in US and Europe in Protest Against Donald Trump

ஈரான் மீது தாக்குதல்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவில் சட்ட விரோத குடியேறிகளை வெளியேற்றுவதாக கூறி அங்கு முறையான ஆவணங்களி இன்றி வசித்த பல்லாயிரக்கணக்கானவர்களை வெளியேற்றினார்.

வெனிசுலாவிற்குள் அதிரடியாக புகுந்து அந்த நாட்டு அதிபரையும் கைது செய்து சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு அடுத்தபடியாக ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி அந்த நாட்டின் மீது போர் தொடுத்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகவும் அமைதிக்கான நோபல் பரிசு ஏன் எனக்கு தரவில்லை என்று கேள்வி எழுப்பிய டிரம்ப் தான் தற்போது ஈரான் மீது தாக்குதலை தொடுத்துள்ளார்.

உலக அளவில் ஏரிபொருள் நெருக்கடி

கடந்த மாதம் 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்தன. ஈரான் உச்ச தலைவர் அயேதுல்ல அலி கமேனி அமெரிக்கா தாக்குதலில் கொல்லப்பட்டார். கமேனி கொல்லப்பட்டதால் ஈரான் சரண் அடையும் என்று எதிர்பார்த்த டிரம்புக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஈரான், தனது முழு பலத்தையும் கொண்டு அமெரிக்காவை திருப்பி அடித்தது.

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்கி வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான், ஹார்மூஸ் ஜலசந்தியையும் தங்கள் கட்டுபாட்டில் எடுத்து, கப்பல் போக்குவரத்தை முடக்கியது. இதனால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு உலக அளவில் ஏரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

டிரம்புக்கு எதிராக போராட்டம்

ஈரான் தற்போது மறைமுக பேச்சுவார்த்தை நடத்துவதகாவும் அந்த நாட்டின் மீதான தாக்குதல் ஏப்ரல் 6 வரை நிறுத்திவைக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்தார். ஆனால் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று ஈரான் கூறி வருகிறது. ஈரான் மீது எடுத்த நடவடிக்கைக்கு டிரம்பிற்கு அவரது சொந்த நாட்டிற்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

ஏற்கனவே டிரம்ப், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் மீது பரஸ்பர வரி விதித்தார். இந்த வரி விதிப்பால் அமெரிக்காவில் பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்ந்தது விலை வாசி உயர்ந்தது. இது அமெரிக்கர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், டிரம்பின் கொள்கைகள் மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

நீங்கள் ஒன்றும் மன்னர் இல்லை

குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நீங்கள் ஒன்றும் மன்னர் இல்லை என்ற கோஷத்துடன் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ, மன்ஹாட்டன், மின்னபோலிஸ் ஆகிய பகுதிகளில் இந்த போராட்டம் நடைபெற்றது. அமெரிக்க மட்டும் இன்றி ஐரோப்பிய நாடுகளிலும் இந்த போராட்டம் நடைபெற்றது. லத்தின் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+