Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எல்லா உலக தீவிரவாதத்திற்கு பின்னால் இருப்பது ஒரே நாடுதான்!" ஐநாவில் பாகிஸ்தானை அம்பலப்படுத்திய ஜெய்சங்கர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நியூயார்க்கில் நடந்த ஐநா பொதுச் சபையின் கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானைக் கடுமையாகச் சாடிப் பேசினார். சர்வதேச அளவில் நடந்த பெரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஒரே ஒரு நாடுதான் பின்னணியில் இருப்பதாக அவர் விமர்சித்தார். மேலும், பாகிஸ்தானுக்குப் போகும் நிதியைத் தடுக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐநா பொதுச் சபையின் 80வது கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பாகிஸ்தானைக் கடுமையாகச் சாடிப் பேசினார். சர்வதேச அளவில் நடந்த பெரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஒரே ஒரு நாடுதான் பின்னணியில் இருப்பதாக அவர் விமர்சித்தார். கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்ட சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Minister S Jaishankar Jabs Pakistan at UNGA 2025 Links Major Terror Attack to One Country

அமைச்சர் ஜெய்சங்கர்

நியூயார்க்கில் நடந்த ஐநா பொதுச் சபை கூட்டத்தில் பேசிய அவர், "ஒரு நாடு வெளிப்படையாகவே பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக அறிவிக்கிறது. அங்கு பயங்கரவாத மையங்கள் வெளிப்படையாகச் செயல்படுகிறது, பயங்கரவாதிகள் பகிரங்கமாகப் போற்றப்படுகிறார்கள். இதுபோன்ற செயல்கள் நாம் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்" என்றார்.

ஒரே நாடு தான் காரணம்

உலகப் பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பல ஆண்டுகளாகவே உலகெங்கும் நடக்கும் தீவிரவாதத் தாக்குதலுக்கு அந்நாடுதான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார். அவர் மேலும், "இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தச் சவாலை எதிர்கொண்டு வருகிறது. உலகப் பயங்கரவாதத்தின் மையமாக இருக்கும் ஒரு அண்டை நாடு எங்களுக்கு உள்ளது.

பல ஆண்டுகளாக, முக்கிய சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்கள் அந்த ஒரு நாட்டிலிருந்தே தோன்றுகின்றன. ஐ.நா.வின் பயங்கரவாதிகள் பட்டியலில் அந்நாட்டவர்கள் பலர் உள்ளனர்" என்று பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் கடுமையாகச் சாடினார்.

ஆபரேஷன் சிந்தூர்

'ஆபரேஷன் சிந்தூர்' பற்றிக் குறிப்பிட்ட அவர், "இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராகத் தனது மக்களைப் பாதுகாக்கும் உரிமையைப் பயன்படுத்திக் கொண்டது.. மேலும், இந்த நடவடிக்கை மூலம் குற்றவாளிகளையும் நீதியின் முன் நிறுத்தியது" என்றார். பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதைக் கண்டித்த ஜெய்சங்கர், அந்நாட்டு இதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் அவர், "முக்கிய பயங்கரவாதிகள் மீது தடைகள் விதிக்கப்படும் நிலையில், பயங்கரவாதத்திற்கு நிதி கிடைப்பதைத் தடுக்க வேண்டும். பயங்கரவாதிகளை அழிக்க அந்த நாடு மீது தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளை மன்னிப்பவர்கள், அது அவர்களையே திரும்பித் தாக்கும் என்பதைச் சீக்கிரமே உணர்வார்கள்" என்று கூறினார்.

கண்டிப்பு

ஐ.நா.வில் இந்தியாவின் ராஜதந்திரப் பிரதிநிதியான பெட்டல் கஹ்லோட் நேற்று தான் பாகிஸ்தானைக் கண்டித்து இருந்தார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பயங்கரவாதத்தைப் போற்றுவதாக அவர் நேரடியாகவே சாடியிருந்தார். அவர் அதுபோல சொல்லி சில மணி நேரத்தில் அமைச்சர் ஜெய்சங்கரும் பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பெட்டல் கஹ்லோட் மேலும் பேசுகையில், "இந்தியா பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்றதாகக் கூறியது முழுக்க முழுக்க பொய்.. சண்டையை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம்தான் எங்களிடம் கெஞ்சியது. அழிக்கப்பட்ட ஓடுபாதைகளும், எரிந்த விமான நிறுத்தங்களும் வெற்றி போலத் தோன்றினால், பிரதமர் கூறியது போல, பாகிஸ்தான் அதை அனுபவிக்கலாம்" என்றும் கஹ்லோட் மேலும் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+