அமெரிக்காவில்.. ஜனநாயக கட்சி நான்சி பெலோசி, குடியரசு கட்சி மிட்ச்யோ மெக்கானெல் வீடுகள் அவமதிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் செனட் தலைவர் மிட்ச்யோ மெக்கானெல் மற்றும் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகிரின் வீடுகளை மர்மநபர்கள் அவமதித்து உள்ளனர்.
நான்சி பெலோசி வீட்டின் முன்பு பன்றியின் தலையையும், போலி ரத்தத்தையும் போட்டு சென்றனர். மிட்ச் மெக்கானெல் வீட்டின் கதவு மற்றும் ஜன்னலில் எங்கே எனது பணம்? மிட்ச் ஏழைகளைக் கொன்றுவிடுகிறார் என்ற வாசகங்களும் கிறுக்கி வைத்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அமெரிக்கா கொரோனா பாதிப்பில் உலகின் முதல் நாடாக தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இதனால் அந்த நாட்டில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பலர் வேலை இழந்தனர். கொரோனா நிவாரண நிதிக்காக மக்கள் ஏங்கி தவித்து வந்தனர்.மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் 900 பில்லியன் டாலர் நிவாரண நிதி வழங்கபப்டும் என அறிவிக்கப்பட்டது.
ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் சபை தனி நபருக்கு கொரோனா நிதியாக 600 டாலரிலிருந்து 2,000 டாலர்களாக அதிகரிக்க ஒப்புதல் அளித்தது. ஆனால் குடியரசுக் கட்சி தலைமையிலான செனட் இந்த அதிகரிப்புக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த நிலையில் குடியரசுக் கட்சியின் செனட் தலைவர் மிட்ச் மெக்கானெல் மற்றும் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோரின் வீடுகளை மர்மநபர்கள் அசிங்கப்படுத்தியுள்ளனர்.
நான்சி பெலோசியின் வீட்டின் முன்பு ஒரு பன்றியின் தலையையும், போலி ரத்தத்தையும் புத்தாண்டு தினத்தில் மர்மநபர்கள் போட்டு சென்றதாகவும், மிட்ச் மெக்கானெல் வீட்டின் கதவு மற்றும் ஜன்னலில் எங்கே எனது பணம்? மிட்ச் ஏழைகளைக் கொன்றுவிடுகிறார் என்ற வாசகங்களும் கிறுக்கி வைக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதை யார் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணை பிரிவை போலீசார் அமைத்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications