அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் மர்ம கொலை.. 'ரூம் மேட்' கைது.. போலீஸ் விசாரணை
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள பர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது ரூம் மெட் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் கொலை, 'ரூம் மேட்' மீது சந்தேகம் - போலீஸ் விசாரணை
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பர்டு பல்கலைக்கழகத்தில் ( Purdue University ) டேடே சயின்ஸ் படிப்பை படித்து வருகிறார் மணிஷ் ஷேடா.
இந்திய வம்சாவளி மாணவரான வருண் மணிஷ் ஷேடா (வயது 20) அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்தார்.

அறையில் இறந்து கிடப்பதாக
இந்த நிலையில், மனிஷ் ஷேட்டா, தான் தங்கியிருந்த அறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு திடீரென அழைப்பு வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், மாணவரின் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து மாணவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து விசாரணையை தொடங்கினர். இதில், மணிஷ் ஷேடாவுடன் ஒரே அறையில் தங்கியிருந்த கொரிய நாட்டை சேர்ந்த ஜி மின் ஷா (வயது 22) என்ற மாணவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதில்
மணிஷ் ஷேடா இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் இந்த மாணவர்தான். இதனால், இவரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு பிறகே மணிஷ் ஷேடா கொலை செய்யப்பட்டது எதனால்? யாரால் கொல்லப்பட்டார்? ஆகிய விவரங்கள் தெரியவரும். மணிஷ் ஷேடா உடல் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதில் காயங்கள் அடைந்து உயிரிழந்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேம் விளையாட வரவில்லை
இந்திய வம்சாவளி மாணவர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பயிலும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஷேடாவின் பால்ய நண்பர் அருணாப் சின்கா என்பவர் இந்த சம்பவம் குறித்து கூறியதாவது; செவ்வாய்க்கிழமை இரவில் நண்பர்கள் அனைவரும் ஆன்லைனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்தோம். ஆனால் அன்றைய தினம் ஷேடா கேம் விளையாட வரவில்லை'' என்றார்.

ஆழ்ந்த இரங்கல்கள்
இந்த கொலை சம்பவம் பற்றி பல்கலைக்கழக பிரஸிடண்ட் மிட்ச் டேனியல்ஸ் கூறுகையில், ''இந்திய வம்சாவளி மாணவர் ஷேடா கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. வளாகத்தில் நடந்த சோக சம்பவம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சோகமானது. இந்த துயரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நாங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications